எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1920 ஆம் ஆண்டில் திரு நெல்வேலியில் நடைபெற்ற காங் கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் வகுப்புவாரி உரிமைக்கான தீர் மானத்தை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழிந்தார். ஆறு வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றச் செய்தார். மாநாட் டின் தலைவர் எஸ்.சீனிவாச அய் யங்கார், ‘‘இது பொது நலத்துக்குக் கேடு’’ என்று அனுமதிக்காமல் மறுத்துவிட்டார். அப்போது சி.ராஜகோபாலாச்சாரியார்,  கொள் கையாக வைத்துக் கொள்வோம் - தீர்மானமாக வேண்டாம் என்று தடுத்தார்.

1922 ஆம் ஆண்டில் திருப்பூ ரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட் டிலும் அத்தீர்மானத்தை மீண்டும் கொண்டு சென்றார் பெரியார்.

அப்பொழுது நடைபெற்ற வாக்குவாதத்தில் மனுதர்ம சாஸ் திரத்தையும், இராமாயணத்தையும் கொளுத்தவேண்டும் என்று கர்ச்சனை செய்தார்.

1923 இல் சேலத்தில் நடை பெற்ற மாநாட்டிலும் அதே தீர் மானம் - அதே தலைவர் பெரியார் முன்மொழிய, கலவரம் ஏற்படும் போல் ஆகிவிடவே ஜார்ஜ் ஜோசப்பும், டாக்டர் வரதராஜலு நாயுடுவும் நிறுத்தி விட்டனர்.

1924 ஆம் ஆண்டில் பெரியார் தலைமையிலேயே காங்கிரஸ் மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அங்கு அத்தீர் மானம் வரும் என்று உறுதியாக நம்பிய சீனிவாச அய்யங்கார் தீர் மானத்தைத் தோற்கடிக்க சென் னையிலிருந்து ஆட்களைத் திரட்டி வந்தார். நின்று போய்விட் டது.

1925 நவம்பர் 21, 22 ஆகிய இரு நாள்களிலும் காங்கிரஸ் மாநாடு திரு.வி.கலியாணசுந்தரம் அவர் களின் தலைமையில் காஞ்சிபுரத் தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தந்தை பெரியார் முன்மொழிந்த தீர்மானம்.

‘‘தேசிய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருக்குள்ளும் பற் பல ஜாதியாருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கையும், துவேஷமின்மை யும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜிய சபைகளிலும், பொது ஸ்தா பனங்களிலும் பிராமணர், பிரா மணரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினர் களுக்கும் தனித்தனியாக ஜனத் தொகை விழுக்காடு தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது!’’

முன்மொழிந்தவர் ஈ.வெ.ரா. வழிமொழிந்தவர் எஸ்.இராம நாதன். தீர்மானத்திற்கு மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. அனுமதி மறுத்தார்.

‘‘கொஞ்ச நேரத்துக்கு முன்பு தானே 25 பிரதிநிதிகள் கையெ ழுத்துப் போட்டால் முன்மொழிய லாம் என்று சொன்னீர்கள். அதை ஒப்புக்கொண்டு 30 பேர்களிடம் கையொப்பம் வாங்கிக் கொடுத் தேன். அதற்குள் மாற்றம் ஏன்?’’ என்று ஈ.வெ.ரா. கேட்டபொழுது, பார்ப்பனர்கள் கூச்சல் போட்டனர்.

‘‘எனக்கும், தலைவருக்கும் தான் பிரச்சினை. மற்றவர்கள் கத் தவோ, பிரவேசிக்கவோ கூடாது என்று கூறி, அயோக்கியத்தன மாகவோ, அதிகப்பிரசங்கித்தன மாகவோ யாராவது கத்துவீர்களே யானால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க என்னால் முடியும்‘’ என்று சிங்கக் குரல் கொடுத்தார் ஈ.வெ.ரா.

தீர்மானம் நிறைவேற்றப் படா ததால், காங்கிரசை விட்டு வெளி யேறிய அந்நாள்தான்  நவம்பர் 22 (1925).

அன்று மறுக்கப்பட்ட அத்தீர் மானம் இன்று சமூகநீதி எனும் தலைப்பில் அரசமைப்புச் சட்டத்தி லேயே அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து ஆட்சி செய்கிறதே!

வாழ்க பெரியார்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner