எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாட்னா, நவ.23 பீகார் மாநில யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில், சமூக நீதி மாநாடு பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் 19.11.2017 அன்று பாட்னா மியூசியம் அரங்கில் நடைபெற்றது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மாநாட்டை துவக்கி வைத்தார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கிருபால் யாதவ், பீகார் மாநில மேலவை உறுப்பினர் உபேந்திர பிரசாத், யூனியன் வங்கி பொதுமேலாளர் ஏ.கே.தீட்சித், யூனியன் வங்கி பாட்னா பிராந்தியத்தின் துணை பொது மேலாளர் ஜக்மோகன் சிங், உதவி பொது மேலாளர் எஸ்.கே.பார்கவா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பீகார் மாநில பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரவீந்திரராம், வங்கிப் பணி நிறைவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பணியாற்றியமைக்கும் பாராட்டு தெரிவித்து, மாநாட்டில் சிறப்பு செய்யப்பட்டது. தந்தை பெரியார் படம் பொறித்த நினைவுப்பரிசினை, மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ் அளித்தார்.

தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகளை மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், மேலவை உறுப்பினர் உபேந்திர பிரசாத் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது.

யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் அமைப்பாளர் டாக்டர் அமிர்தான்சு நன்றியுரை நிகழ்த்தினார்.

மாநாட்டில் பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner