எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாசிங்டன், நவ. 24 -2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற் படுத்தக் கூடிய நிலநடுக்கங் களின் எண்ணிக்கை அதிகரிக் கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கப் புவியியலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்தரக் கூட்டம் வாசிங்டனில் அண் மையில் நடைபெற்றது. இதில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம், பென்ரிக் பல்கலைக்கழக பேரா சிரியை ரெபேக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துப் பேசினர்.

அப்போது, 1900-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலநடுக்கங்களை ஆய்வுசெய்ததில், குறிப்பிட்ட 5 காலகட்டங்களில் ஆண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும், இதர காலகட்டங்களில் ஆண்டுக்கு 15 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப் பதையும் கண்டுபிடித்துள்ளதாக ரோஜர் பில்ஹமும், ரெபேக்கா வும் தெரிவித்துள்ளனர். மேலும், எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததோ அப்போது அதிக நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ளன; எங் களது ஆய்வின்படி பூமியின் சுழற்சிக்கும் நிலநடுக்கங் களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந் துள்ளதாகவும்; இதன் காரண மாக ஒரு நாளின் கால அளவு ஒரு மில்லி விநாடி அளவுக்குக் குறைந்திருக் கிறது என்றும் தெரிவித்துள் ளனர். இதனால் வரும் 2018-ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner