எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ‘‘ஊசி மிளகாய்’’

 

இந்திய நாடு, எவ்வளவு பெரிய இருட்டில் இருக்கிறது; உலகத்தார் 21ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஒரு நாடா, இப்படிப்பட்ட மக்களா என்று நினைத்து, வெட்கத்தால் தலை குனிவை ஏற்படுத்துவதாக நாளும் அசல் கேலிக் கூத்தான - பரிகசிக்கத்தக்க செய்திகள் வந்த வண்ணமே உள்ளன!

அசாமில் மாநில அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள ஒரு பா.ஜ.க. அமைச்சர் கவுகாத்தியில் நேற்று (23.11.2017) நடைபெற்ற ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் (ஹிமந்த் பிஸ்வா சர்மா என்ற பார்ப்பனர்) பேசியுள்ளதைப் படியுங்கள்.

"நல்ல மற்ற கெட்ட கர்மாமீது ஹிந்துக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே மனிதன் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களுக்கும், முன் ஜென்மத்தில் செய்த துர்வினைக்கும் தொடர்பு உள்ளது. நாம் எப்போது பாவம் செய்கிறோமோ அப்போதே கடவுள் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார்!

நம் இளைஞர்களுக்குப் புற்றுநோய் வருவதையும் பார்த்திருக்கிறோம். அவர்கள் விபத்துக்களில் சிக்குவதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவர்கள் கடந்த காலத்தைப்  பார்த்தால் அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனையாகவே அது அமைந்திருக்குமே தவிர, வேறு ஒன்றுமேயில்லை.

நாம் செய்த பாவத்திற்கான தண்டனையை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்." இதுதான் அந்த அமைச்சரின் அதி 'மேதாவித்தன' பேச்சு!

எத்தகைய மூடத்தனத்தின் முடைநாற்றம். பார்ப்பனர்களும், பகவத்கீதையும் கர்மம், முன் ஜென்ம வினைப் பயன், தர்மம் என்று கூறியவை மிகப் பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டவைகளே அவர்களது இந்த உலுத்துப் போன கர்மா - தர்மா - முற்பிறவிப் பயன் என்பவை!

பகவான் ரமண ரிஷிக்குப் புற்று நோய் ஏற்பட்டதே - அது எதனால்? அவரும் பாவம் செய்து அப்புறம் எப்படி 'ரிஷியாகி; அவர் 'பகவான்' ஆனார்? பகவானும் பாவம் செய்வாரா!

நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழுகிறோமா, அல்லது பழைய காட்டுமிராண்டி யுகத்தில் வாழுகிறோமா என்பதை இப்படிப்பட்ட உலக மஹா அறிவாளிகளை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டுமோ!

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் ஆஸ்பத்திரிக்கு முன் ஜோசியரை அமர்த்தி, நோய் தீருமா என்று கேட்டே டாக்டர்கள் சிகிச்சை ஆரம்பிக்கும் அவலம்!

என்னே மடமையின் புது உத்வேகம்!

உலக முழுவதிலும் உள்ள பல நாடுகளின் தலை சிறந்த நோபல் விஞ்ஞானிகள் உட்பட விஞ்ஞானிகள் கூடிய மாநாட்டைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி "உறுப்பு மாற்று  (Transplantation) அறுவை சிகிச்சை விநாயகருக்கு யானைத் தலை வைக்கப்பட்ட காலத்திலேயிருந்து பாரத நாட்டில் உள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் நமது புராண இதிகாச காலத்திலேயே இருந்ததற்கு அதுவே சான்று" என்று பேசியதைக் கண்டு, தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, தலை கவிழ்ந்து உட்கார்ந்த

விஞ்ஞானிகளை வியக்க  வைத்தவர் - வியர்க்க வைத்தரும்கூட - நமது பிரதமர் மோடி அல்லவா! அவரது வழி வந்த அமைச்சர்கள், கட்சியினர் இப்படி சிந்திக்காமல் வேறு எப்படி யோசிப்பர்? அந்தோ, ஞான பூமியே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner