எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அய்தராபாத், நவ. 24- முஸ் லிம்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பி னர்கள் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதை தீர்மானிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கக்கோரி தேசிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெலங் கானா மாநில முதல்வர் கே.சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தி டில்லியில்  போராட்டம்  நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்காக இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் இதர மாநிலங்களின் ஆதரவையும் அவர் திரட்டுகிறார்.

தெலங்கானா மாநில அரசு இடஒதுக்கீட்டு அளவை 62 சத வீதமாக உயர்த்த முடிவு செய் துள்ளது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில் இந்த முக்கிய குறிப்பை அரசமைப்புச் சட்டத் தின் 9ஆவது பட்டியலில் சேர்க் கவும் மத்திய அரசின் உதவியை கே. சந்திரசேகர ராவ்  நாடியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடஒதுக் கீட்டை உயர்த்தும் உரிமையை பெறுவதற்காக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.

மாநிலங்களுக்கு இடஒதுக் கீட்டு உரிமையை பெறும் நடவடிக்கை குறித்து தெலங்கானா மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், இடஒதுக் கீட்டு உரிமை தொடர்பாக கே.சந்திரசேகர ராவ் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் பேசியுள்ளார். அந்த மாநில முதல்வர்களும் இதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கு மாநில அரசு களுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய அரசு காட்டும் பாரபட் சத்தைக் கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டம் நடத்த வும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

தெலங்கானாவில் முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்துவதற்கு அம்மாநில சட்டப்பேரவையில் ஒரு தீர் மானம் ஏற்கெனவே நிறைவேற் றப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள தாழ்த்தப் பட்ட பழங்குடியினரின் மக்கள் தொகை அடிப்படையில் அவர் களுக்கான இடஒதுக்கீட்டையும் 6 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தவும் தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக தெலங் கானா மாநில அரசின் இடஒதுக் கீட்டு அளவு 50 சதவீதத்தை தாண் டிவிடும். இதனால் சட்டச்சிக்கல் கள் உருவாகும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது.இதுகுறித்து தெலங் கானா மாநில சாலைகள் மற்றும் கட்டடங்கள்  துறை அமைச்சர் துன்மலா நாகேஸ்வர ராவ் கூறுகையில், தமிழ் நாட்டில் இடஒதுக்கீட்டு அளவு 69 சதவீத மாக உள்ள நிலையில் தெலங் கானாவுக்கு 62 சதவீத இடஒதுக் கீட்டை வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்?

வடமாநிலங்களில் தாழ்த்தப் பட்ட பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டளவு 50 சதவீதத் திற்கும் கூடுதலாக உள்ள நிலை யில், தெலங்கானாவில் இந்த பிரிவினரின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளபோதும் தெலங்கனாவுக்கு அனுமதி ஏன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner