எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, நவ. 25 மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதி உதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் நிதின் கட்கரியின் நிறுவனமாக இருக்கலாம் என்றும், நிதின்கட்கரியின் உதவியாளர் இதற்கு பினாமியாக உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு,  வைபவ் தாங்கே என்ற உதவியாளர் உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் இவர் மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுடன் உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

கட்கரியின் ஆதரவாளரான இவர் "இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் கிரீன் எனர்ஜி" என்னும் மின் உற்பத்தி நிறுவனத்தை கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அன்று ஆரம்பித்துள்ளார்.  இந்த நிறுவனம் லாபம் இல்லாத ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டுள்ளது. இவருடன் 50 சதவிகித கூட்டாளியாக  மகாராட்டிரா மாநிலம் சாலீஸ்காவ் என்னும் ஊரிலுள்ள கிருஷ்ணராவ் பாடில் என்பவர் சேர்ந்துள்ளார்.

இந்த நிறுவனத்துக்கு அரசின் நிதி உதவியும், அரசு சார்ந்த துறைகளில் இருந்து நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.  அது தவிர பல்வேறு தனியாரிடம் இருந்தும் நிதி உதவிகள் பெறப்பட்டுள்ளன.

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அரசிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு நிறுவனத்தின் சார்பிலும் அரசி டமோ, அரசு சார்ந்த துறைகளிலோ அல்லது தனியாரிடமோ நிதி உதவிகள் பெறக் கூடாது என்பது அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளில் ஒன்றாகும்.  அது மட்டுமின்றி நிதி உதவி கோரி விண்ணப்பிப்பதும் குற்ற மாகும். வைபவ் தாங்கே இந்த விதிகளை மீறியதாகப் புகார் எழுப்பப்பட்டது.

ஆனால், வைபவ் தாங்கே தான் விதிமீறல் ஏதும் செய்யவில்லை எனக் கூறி உள்ளார்.  நிறுவனம் அளித்துள்ள ஆவணங்கள் மூலம் அந்த நிறுவனம் பலரிடம் நிதி உதவி கேட்ட தாகவும், நிதி உதவி வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.  இதில் அரசுத் துறை களும் அடங்கும்.

நிறுவனத்தின் வரவு - செலவு கணக்கில், 2015 ஆம் ஆண்டு கணக்கில் ஆண்டு இறுதி யில் கையிருப்பு ரொக்கமாக ரூ.74 லட்சம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மற் றொரு தகவலில் ரூ. 73 லட்சம் நிதி உதவி யாக பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. நிறுவனத்தின் 2015--16ஆம் ஆண்டு அறிக்கையில் மொத்தம் ரூ. 1.33 கோடி நிதி உதவி பெறப்பட்டதாக உள்ளது. அத்துடன் அரசுத் துறைகளிடம் இருந்து விதி எண் ஏ எஸ் 12 இன் கீழ் நிதி உதவிகள் பெறப் பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வைபவ் தாங்கே கட்கரியின் அமைச்சகம் தனது நிறுவனத்துக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை என மறுத்துள்ளார்.  அதே நேரத்தில் மின் உற்பத்தி குறித்து இந்த நிறு வனம் பல கலந்துரையாடல்களையும், கூட்டங்களையும் பல தலைப்புகளில் கட்கரி யின் கீழுள்ள துறைகளில் நடத்தி உள்ளது.  சில கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகவும் அமைச்சர் அழைக்கப்பட்டுள்ளார்.

வைபவ் தாங்கே, அளித்துள்ள அறிக்கை யில், "நான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் போது அரசுப் பணியில் இல்லை.   அது லாபம் ஈட்டாத தொண்டு நிறுவனம் என்ப தால் பகுதி நேரமாகப் பணிகளை கவனித் தேன்.  ஆனால் அரசுப் பணி காரணமாக  அந்த நிறுவனத்திலிருந்து நான் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.  ஆனால் அந்த நிறுவனம் எனது ராஜினா மாவை  நவம்பர் 16ஆம் தேதிதான் ஏற்றுக் கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்கரியின் உதவியாளராக வைபவ் தாங்கே நியமிக்கப்பட்ட பின்னரே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும், அவர் அரசுப் பணியில் இருக்கும் போதே அரசு நிதி உதவி வரத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிறுவனத்துக்கு அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் சுரேஷ் பிரபு ஆகியோர் ஆதரவு அளிப்பதாக தகவல் கள் வந்துள்ளன.  இது குறித்து செய்தி யாளர்கள் கேள்விகளை அமைச்சர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதுவரை பதில் வரவில்லை.

நிதின் கட்கரி ஏற்கெனவே போலியான முகவரிகள் கொடுத்து தனது வீட்டுத் தோட் டக்காரர், சமையற்காரர், கார் ஓட்டுநர் மற்றும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வர்களின் பெயர்களில் பல நிறுவனங்களைத் திறந்து பலகோடிகள் மோசடி செய்துள்ளதாக வருமானவரித்துறையினர் 2013-ஆம் ஆண்டு நிதின்கட்கரி மீது புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்மீது பல மோசடிவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பிறகும் இவரது ஊழல்கள்  தொடர்கின்றன. ஆனால் மோடி தனது அமைச்சரவை ஊழலற்ற அமைச்சரவை என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner