எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், நவ.25 மத்தி யப்பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி) மாநில அரசுப் பணி யாளர் தேர்வு வாரியமாக செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் எம்பிபிஇபி நடத்தி வருகிறது. வியாபம் எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் பல்வேறு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிபிஅய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், 592 பேருக்கு எதிராக சிபிஅய் அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வியாபம் முன்னாள் இயக்குநர் பங்கஜ் திரிவேதி உட்பட 4 முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் இதில் இடம் பெற் றுள்ளன. இதுதவிர, போபால், இந்தூர் நகரின் 4 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகை யில் இடம்பெற்றுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner