எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, நவ.25  மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண் டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண்சோரி வலி யுறுத்தியுள்ளார்.

ஆபத்தான சூழலில் இருக் கும் தேசத்தை மீட்க பாஜக வுக்கு எதிராக அனைத்து கட்சி களும் ஓரணியாக திரள வேண் டும் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதளப் பிரிவு ஆலோசகர் அங்கித் லால் எழுதிய 'இந்தியா சோஷியல்' என்ற நூல், டில்லி யில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி யில் மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி தலை வர்கள் உள்ளிட்டோர் பங்கேற் றனர். அதில் அருண் சோரி பேசிய தாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் மோடி அலை வீசிய தாகக் கூறப்பட்டது. அவரால் தான் பாஜக மகத்தான வெற்றி பெற்றதாகவும் பிரகடனப்படுத் தப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக 31 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேவேளை யில் பிற கட்சிகள் 69 சதவீத வாக்குகளை வசப்படுத்தியி ருந்தன.

எதிர்க்கட்சிகள் தனித்தனி யாகத் தேர்தலைச் சந்தித்து வாக்குகளைப் பிரித்ததன் காரணமாகவே பாஜகவின் வெற்றி சாத்தியமானது. இனி அவ்வாறு நடக்கக் கூடாது.

மத்தியில் ஆட்சியமைத் துள்ள பாஜக அரசு, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நாடு உண்மையாகவே அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனக் கரு தினால், எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக நிற்க வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து தொகுதி களில் ஒரே ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner