எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, நவ.25 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தி.மு.க.வுக்குத் தான் என திருநாவுக்கரசர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூன்யன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிக்கின்றன. இதுவரை 6 கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப் பாட்டை எடுத்துள்ளன.  இந்த நிலையில்  ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லாமுத்து சோழன்,கடந்த முறை தி.மு.க சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.  கூட்டத் தில் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆர். எஸ்.பாரதி எம்.பி., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந் ததும் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்திக்க தயாராக இருக்கிறோம்.ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்  தி.மு.க வேட்பாளராக மருதுகணேஷ் என்கிற எம்.என் கணேஷ் போட்டியிடுவார். ஆ.ர்.கே நகர் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner