எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

பனங்காடு, நவ.28 சபரி மலை சென்று திரும்பிய அய் யப்ப பக்தர்கள் விபத்துக்குள்ளா னார்கள். விபத்தில் காயம டைந்த ஏழு பேரில் இருவர் உயிரிழந்தார்கள்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா பகு தியைச் சேர்ந்தவர்கள் ராமஆஞ்சநேயலு (31), ராகுல் (8), ராம்பாபு (40), கோலத்திரி (47), சிவா (48), சவுத்திரி (38), சீனிவாசராவ் (40). இவர்கள் ஏழு பேரும் கடந்த சில தினங் களுக்கு முன்பு காரில் சபரி மலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத் துக்குள்ளானார்கள்.

தமிழக, ஆந்திர மாநில எல் லையான பனங்காடு வழியாக விஜயவாடா செல்லும்போது, நேற்று (27.11.2017) அதிகாலை 5 மணிக்கு சென்னை, கொல் கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது, பனங்காடு என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அவர்கள் சென்ற கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.  தகவ லறிந்து வந்த தடா காவல்துறையினர் இடிபாட் டில் சிக்கிய பக்தர்களை மீட் டனர்.

விபத்தில் ராமஆஞ்சநே யலு, ராகுல் ஆகிய இருவரும் இறந்தனர். காயமடைந்த ராம் பாபு உட்பட 5 பேரை மீட்டு சூலூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இறந்த ராமஆஞ்சநேயலு, ராகுல் ஆகியோரது உடலை பிரேத பரிசோதனைக்காக சூலூர்பேட்டை அரசு மருத்து வமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து தடா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசா ரித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner