எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராணுவ வீரர் கடத்தி கொல்லப்பட்ட நிலையில்

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதாக தெரிவிப்பது உண்மையா?

பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கேள்வி

மும்பை, நவ.28 ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதாக தெரிவிப்பது உண் மையா? என்று மத்திய அர சுக்கு சிவசேனை கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

பிராந்திய ராணுவ வீரர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்ப வத்தை சுட்டிக்காட்டி, இந்தக் கேள்வியை அக்கட்சி கேட் டுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனை கட்சியின் 'சாம்னா' நாளிதழில் திங்கள்கிழமை வெளியான தலை யங்கத்தில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:

காஷ்மீரில் பிராந்திய ராணுவ வீரர் இர்ஃபான் அகமது கடத் திச் செல்லப்பட்டு கொல்லப் பட்டார். காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத் தவும், மன உறுதியைக் குறைக் கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உத்தி இதுவாகும். பாகிஸ்தானியர்களின் மனதின் குரலால் இது நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, நாட்டு மக்களுடன் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் பேசி வருபவர் (பிரதமர் நரேந் திர மோடி) இதைப் புரிந்து கொள்வாரா?

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதாகத் தெரிவித்து வரு வோருக்கு, ராணுவ வீரர் இர் பான் கொலையின் மூலம் சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மும்பை தாக்குத லுக்கு மூளையாகச் செயல் பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலை வர் ஹஃபீஸ் சயீதும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இத னால், காஷ்மீரில் பயங்கரவாதத் துக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிகழாண்டில் 100 முதல் 150 பயங்கரவாதிகளைக் கொன்று விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வீச்சு சம்பவங் கள் குறைந்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில், இளைஞர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் மட்டும் நிறுத்தப்படவில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற் காக ராணுவத்தில் காஷ்மீர் இளைஞர்கள் சேர்வதை பயங் கரவாதிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று 'சாம்னா' தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner