எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இந்நாள் (1908).

49 வயதில் மறைந்து தமிழுலகத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிட்டார்.

‘‘தென்றல் பொங்கல் மலரில்’’ - கலைவாணர் தந்த பதில்கள் இங்கே:

வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்த மான கட்சி எது?

விடை: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது.

இருந்தாலும் பரவாயில்லை. சந்தேகமில்லாமல் ஆதரிப்பது, விரும்புவது சுயமரியாதைக் கட்சிதான்.

வினா: உங்கள் கொள்கை என்ன?

விடை: ஆதிமுதல் ‘‘குடி அரசு’’ ,கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய  ‘‘தேசபந்து’’ ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அப்போது நான் சிறுவன். நாடகக் கம்பெனி யில் வேலை. பக்தி மார்க்கத் திற்கும், நாடகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நன்றாகத் தெரிந்துகொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடி வுக்கு வந்தேன்.

வினா: உங்கள் முடிவு என்ன?

விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.

கலைவாணர் யார் என்றால் - இவர்தான் கலைவாணர்.

திரைப்படத்தில் நகைச் சுவைத் தேனில் தந்தை பெரி யாரின் கருத்துகளை எப்படியெல் லாம் பகிர்ந்தார்!

‘‘டாக்டர் சாவித்திரி’’ திரைப் படம். அதில் ஒரு பாடல்.

காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற

காலம் மாறிப் போச்சு - இப்ப

ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற

உண்மை தெரிஞ்சு போச்சு

அறிவியல் கருத்துகளை எவ் வளவு நளினமாக, வாழைப் பழத் தில் ஊசி ஏற்றுகிறார் பாருங்கள். இவருக்குக் கிடைத்த அருமை யான கவிவாணர் உடுமலை நாராயணக்கவி.

1934 ஆம் ஆண்டு நாடகக் குழு ஏற்பாடு செய்த கம்பெனி வீட்டில் நாடக நடிகர்கள் தங்கி யிருந்தனர். எம்.வி.மணி என்ற நடிகர் பார்ப்பனர். அவரும், இதர பார்ப்பன நடிகர்களும் தனியாக சமையல் அறையில் அமர்ந்து சாப்பிடுவார்களாம்.

அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் கலை வாணர். ஒரு நாள் மணி அய் யரும், மற்ற பார்ப்பன நடிகர் களும் தனி அறையில் சாப் பிட்டுக் கொண்டிருந்தனர்.

‘‘என்னய்யா இது? எவ்வளவு நாழிகை ரசம் கேட்பது? சேச்சே!’’ என்று கூறியபடி கலைவாணர் சமையல் அறைக்குள் சென்று, ரசம் இருந்த பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு வந்தார். எம்.ஜி.ராமச்சந்திரனும், மற்றவர் களும் பொரியல், கூட்டு, சாம்பார், மோர் பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.  அவ்வளவு தான்! உணவுப் பாத்திரங்கள் தீட்டுப்பட்டு விட்டதாக பார்ப் பனர்கள் சாம்பாரோடு தங்கள் உணவை முடித்துக் கொண்டனர்.

எப்படி?

இவர்தான் கலைவாணர்!

- மயிலாடன்

Comments  

 
#1 ethiraj 2017-11-29 17:59
மக்களின் அறியாமையையும், மூடநம்பிக்கைகளை யும் களைய, திரைத் துறையினை, தமது நகைச்சுவை கருத்துகளைப் பயன்படுத்தி மதிப்பிற்குரிய கலைவாணர் என்று போற்றப்படும் ந.சு.கிருட்டிணன் அவர்கள் தமிழினத்திற்கு மாபெரும் தொண்டாற்றினார்.
தன்னிடமிருந்த செல்வம் அத்தனையும் கைமாறு என்று கேட்டு வருபவருக்கு வாரி வழங்கிய வள்ளல்.
உண்மையில் வள்ளல் என்ற சொல்லுக்கு இலக்கணம் இவரே!
தன்னுடைய இறுதி நாட்களில் மருத்துவ மனையில் கழித்துக்கொண்டி ருந்தக்கால் கைமாறு என்று கேட்டு வந்தவருக்கு தங்களுக்கு கொடுக்க என்னிடம் எஞ்சியிருப்பது இந்த வெள்ளிச் சொம்பு ஒன்றே என்று அவர் கொடுத்ததாக அவரைப்பற்றிய கலைவாணர் 100 (கலையாத நினைவுகள்) என்ற நூலில் படித்திருக்கின் றேன்.
திராவிட இயக்கம் பெற்ற மாபெரும் மாணிக்கங்களில் இவரும் ஒருவர்!
மாந்த நேயப் பற்றாளர்!
தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழிக்கொப்ப நம்மினம் தலைநிமிர உருவான தன்மான இயக்கத் தோப்பில், பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பிய கலைவாணர், ஓர் நறுமணம் நல்கும் மரம்! அவர் மறைந்தாலும் அவரின் புகழ் மணம் என்றென்றும்வீ சும்!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner