எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.29 தேசியவாதம் என்பது மிகவும் ஆபத்தானது என்று ரிசர்வ் வங்கியின் முன் னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பேசியதாவது:  ஜனரஞ்சக தேசியவாதம் என்பது பொரு ளாதாரத்தைச் சீரழித்துவிடும். பிரிவினைவாதத்தை ஏற்படுத் தக்கூடிய இந்த வகை தேசிய வாதம் பொருளாதாரத்தை பின் னோக்கிக் கொண்டு செல்லும். பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டுத் தான் ஜனரஞ்சக தேசியவாதம் செயல்படுகிறது.

உலகம் முழுக்கவும் இது போன்ற பிரச்சாரங்கள் உள்ளன. இந்தியாவில் அது அதிகமாக உள்ளது. தேசப்பற்று பேசுவது,  பொதுநலன் மிக்க திட்டங்களை ஒரு மோசமான செயலாக சித் தரிப்பது போன் றவை மக்களை ஏமாற்றப் பயன்படுகிறது.

முக்கியமாக வேலை வாய்ப் பில் இட ஒதுக்கீடு கொடுக்கப் படுவதை சுட்டிக் காட்டியும் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடக் கின்றன. இதுபோன்ற பிரச் சாரங்களை தவிர்க்க பெரும் பான்மை சமூகத்தினருக்கும் வேலை வாய்ப்பு போதிய அள வில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

தேசப்பற்று என்பது வேறு; தேசியவாதம் என்பதை நான் நாட்டுப்பற்று என்பதோடு இணைத்து பார்க்கவில்லை. இரண்டும் வேறு - வேறு! தேசிய வாதம் என்பது பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது, மிகவும் ஆபத்தானது.  இவ்வாறு ரகு ராம் ராஜன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner