எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி "சிஷீணீறீவீtவீஷீஸீ ஹ்மீணீக்ஷீs" என்ற நூலை எழுதியுள்ளார்.  அதில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. "தீபாவளி அன்று காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ய முடிகிறது. ஆனால் ஈத் பண்டிகையன்று ஒரு முசுலிம் பிரமுகரைக் கைது செய்ய முடியவில்லை" என்று குறிப் பிட்டுள்ளார். (தகவல்: ஆர்.எஸ்.எஸ். இதழான 'விஜயபாரதம்' 24.11.2017 பக்கம்: 4).

குடியரசுத் தலைவராக இருப்பவர்களுக்குக்கூட அந்தப் பார்ப்பனப் பாசம் போவ தில்லையே!

சங்கராச்சாரியாராக இருக் கக் கூடியவர் ஒரு குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண் டுமா?

சங்கராச்சாரியாரை தீபாவளி யன்று  கைது செய்தது பற்றி சொன்னதோடு நிறுத்தியிருந் தாலும் பரவாயில்லை. ஈத் பண் டிகையன்று ஒரு முசுலிம் பிர முகரைக் கைது செய்ய முடிய வில்லை என்று சொல்லும் இடத் தில்தான் - இவரின் இந்துத்துவா பார்ப்பன முகம் மகா பிரகாசமாக ஜொலிக்கிறது!

தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு நாடாளு மன்ற ஒப்புதல் கிடைக்கப் பெற்று ஒன்பதாவது அட்ட வணையில் அது சேர்க்கப்பட கையொப்பமிட்ட அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ன சொன்னார், நினைவிருக்கிறதா?

கிறீtலீஷீuரீலீ tலீமீ ஹீuஷீtணீ sஹ்stமீனீ னீவீரீலீt லீணீஸ்மீ tணீளீமீஸீ ணீஷ்ணீஹ் ஜீஷீsts யீக்ஷீஷீனீ ஙிக்ஷீணீலீனீவீஸீ ஸீஷீ ஷீஸீமீ நீஷீuறீபீ tணீளீமீ ணீஷ்ணீஹ் தீக்ஷீணீலீனீவீஸீ's தீக்ஷீணீவீஸீ ('மிஸீபீவீணீஸீ ணிஜ்ஜீக்ஷீமீss' 25.9.1994).

பார்ப்பனர்களிடமிருந்து பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டாலும் அவர்களின் மூளையை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது  என்று சொல்லவில்லையா?

பாபர் மசூதியை பிஜேபி சங்பரிவார்க் கும்பல் அட்டூழி யமாக இடித்து ஆனந்தக் கூத்து நடத்தியதைத் தொடர்ந்து கல் யாண்சிங் தலைமையிலான உ.பி. - பிஜேபி அரசு கலைக்கப் பட்டதைக் கண்டித்து வாஜ்பேயி தலைமையில் அக் கூட்டம் உண்ணாவிரதம் இருந்ததே நினைவிருக்கிறதா? அந்த உண்ணாவிரதக் கூட்டத் தில் கலந்து கொண்ட ஒருவர் யார் தெரியுமா? மேனாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமய்யர்தான்! பார்ப் பனர் எங்கிருந்தாலும் அவர் களின் இதயதாகம், பாசம் மட்டும் பார்ப்பனீயத்திலும், இந்துத்துவா இடத்திலும்தான்.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner