எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் புத்தாக்கத்துக்கான சிறந்த தனி நபர் விருதுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம், மாற் றுத்திறனாளிகளுக்கான துறையின் சார்பில் சென்னை மெட்இந்தியா மருத்துவமனையின் தலைவர் மருத் துவர் டி.எஸ்.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளில் புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 3.12.2017 அன்று மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினைப் பெறுகிறார். விருது அளிக்கப்படும் நிகழ்ச்சி அரசு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

விருது பெறும் டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner