எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூர்க்கர்களின் மூர்க்கத்தனம்

மம்தாவின் மூக்குக்கு ரூ.1 கோடி பரிசாம்

மீரட், நவ.30  பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர் களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவதாக, ராஜ புத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவ தற்கு ராஜபுத்ர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகாவுக்கு, மிரட்டல் வந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரி ணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், பத்மாவதி திரைப் படத்தை திரையிட அனுமதி அளிப்பதாகவும் அவர் கூறி னார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபுத்ர சமுதாயத்தினர், உ.பி., மாநிலம், ஷாமலி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுத்து வருபவர் களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் அறிவித்தார்.


 

குஜராத் : என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் மோடி பேசுகிறார்

மக்களவை காங். தலைவர் கார்கே

பெங்களூரு, நவ.30 காங்கிரசு தலைவர்கள் நாட்டை விற்று விட்டதாக நரேந்திரமோடி  கூறி யுள்ளார். அப்படி விற்றிருந்தால் அவரால் பிரதமராகி இருக்க முடியுமா?  என்று மக்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கலபுர்கி யில் நேற்று அவர் கூறியதாவது: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் டீ விற்றதாகவும், காங்கிரசு தலைவர்கள் நாட்டை விற்று  விட்டதாகவும் விமர்சித் துள்ளார். தேர்தல் நேரத்தில் மக் களை திசை  திருப்பும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுள்ளார். டீ விற்றவருக்கு பல லட்சம்  மதிப் பில் கோட்-சூட் அணிய எப்படி பணம் வந்தது? இந்த கேள்வியை மக்கள் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியுமா?  நாட்டை காங்கிரசு  தலைவர்கள் விற்றிருந் தால் அவரால் எப்படி பிரதமராகி இருக்க முடியும்? குஜராத் தேர்த லில் காங்கிரசு அலை வீசுவதால், என்ன பேசுகிறோம் என்று புரியா மல் மோடி  பேசி வருகிறார். இவ்வாறு கார்கே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner