எழுத்துரு அளவு Larger Font Smaller Font


-கவிஞர் ஈரோடு தமிழன்பன்

தந்தை பெரியார் தடத்தில்

தடைபடா நடை;

இடையறா உழைப்பு

ஈடிலா அறிவு

ஆசிரியர் வீரமணி

ஆளுமைத் திறப்பாடு

 

பூக்கொய்தல் போலல்ல

பொதுவாழ்வு

புண்களின் சங்கமத்தில்

புதுவாழ்வைப்

படைப்பது அது!

 

ஆயிரம் இடையூறுகள்

பாயிரம் படைக்க

ஆனதொரு காவியம்

ஆசிரியர் வீரமணி.

 

நடைவண்டி நாள்களிலேயே

தந்தை பெரியார்

படைகண்டு சேர்ந்தார்

பூபாளச் சொற்களிலேயே

நெருப்புப் பொறிகளின்

தெறிப்புகள் நிகழ்த்தினார்.

 

விழிப்பு நேரங்கள் இயக்க

உழைப்பு நேரங்கள்

இரவுப் பொழுதுகள்

கருத்துக் கருத்தரிப்புப்

பொழுதுகள்

ஆசிரியர் நாள்களை

அவசியமற்றவை

அள்ளிக்கொண்டு

போனதில்லை.

ஒவ்வொரு நொடியிலும்

வாழும்

ஒப்பற்ற தலைவர் வீரமணி.

வாழ்வதென்பது

மூச்சின் முகவரியில்

முகாமிட்டிருப்பதல்ல;

 

இயக்கம் என்னும்

வரிப்புலி முதுகில் ஏறி

எதிர்ப்புகளை

வீழ்த்தும் முயற்சியில்

ஈடுபட்டிருப்பதாகும்.

 

அவசரப் பேச்சிலும் ஆயிரம்

கருத்துச் சரங்கள் இருக்கும்

கொடுத்த புத்தகம் பற்றி

அடுத்த நாளே அலசுவார்

பேச்சில்

 

கையைவிட்டு

இறங்கிய நொடியில்

புத்தகம்

இவரின் மனத்தில்

ஏறிக்கொள்கிறது.

 

தமிழ் மக்களுக்காகவே

தயாரிக்கப்பட்ட

இவர் வாழ்க்கைக்கு

வயது எண்பத்தைந்து

 

இன்னும்

இளவேனிற் காலம் உண்டு

இன்னும் மாரிக்காலம் உண்டு

இன்னும்

வாழ்காலம் ஆசிரியர்

வீரமணிக்கு நீள உண்டு

ஏனெனில்

இன்னும்

போராட்டங்கள்

இல்லாமற் போகவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner