எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் இயக்கங்கள் பலகீனப்பட்டுவிட்டது என்று எதிரிகள்  தப்புக் கணக்கு போடவேண்டாம் - ஒன்றுபடவேண்டிய நேரத்தில் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

ஈரோடு, டிச.2 பெரியார் இயக்கங்கள் பலகீனப் பட்டு விட்டது என்று எதிரிகள் தப்புக் கணக்குப் போடவேண்டாம்; ஒன்றுபடவேண்டிய நேரத்தில், ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஈரோட்டில் இன்று (2.12.2017) நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக ஈரோடு சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சிக்குரியது

எனது 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அறிவாசன் பிறந்த இந்த மண்ணில் நடத்துவதும், எல்லா தோழர்களையும் சந்திப்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

ஒன்றுபடவேண்டிய நேரத்தில்,

ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்!

ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறி ஆகிய வெறிகளையும் எதிர்த்து தந்தை பெரியார் போராடி, ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற, தீண்டாமை ஒழிந்த, பெண்ணடிமை நீங்கிய ஒரு புதிய சமுதாயத்தை, சுயமரியாதையுள்ள, மானமும், அறிவும் உள்ள மக்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்கிற அந்தப் பணியில், நாங்கள் எங்கே இருந்தாலும், ஒன்றுபடவேண்டிய நேரத்தில், ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்பதற்கு இந்தப் பிறந்த நாள் விழாவில், தோழர் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வந்து வாழ்த்துவதும், உடனடியாக இந்தப் பய ணத்தில், இந்தப் போராட்டங்களில் நாங்களும் பங்கு பெறுவோம் என்பதற்குரிய அறிகுறிகள் ஆகும். இது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நறுக்கவேண்டியவைகளை

நறுக்கும்

பெரியார் இயக்கங்கள் ஏதோ பலகீனப்பட்டு விட்டது என்று எதிரிகள் தப்புக் கணக்குப் போடக்கூடாது;கத்திரிக்கோலினுடையஇரண்டு பிளேடுகள் தனியாக இருந்தாலும், நறுக்கவேண் டியவைகளை நறுக்கும் என்பதற்கான அடை யாளமாகும்.

ஆகவே, தெளிவாக, நீர் அடித்து நீர் விலகாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தொடரட்டும் இந்தப் பணி; வீழ்த்தப்படட்டும் ஆரியத்தின் சூழ்ச்சிகள்; ஒழியட்டும் ஜாதி - தீண் டாமை - பெண்ணடிமை - மூடநம்பிக்கை!

சேரவேண்டிய நேரத்தில்,

செய்யவேண்டிய பணியை...

செய்தியாளர்: 21 ஆண்டுகள் கழித்து உங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள் உங்களை சந்தித் திருக்கிறார்கள்; எதிர்காலத்தில் திராவிடர் கழகம் ஒன்றாக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: நான் ஏற்கெனவே சொல்லி விட்டேனே - நீர் அடித்து நீர் விலகாது. எனவே, சேரவேண்டிய நேரத்தில், செய்யவேண்டிய பணியை, செய்வதற்குத் தோழர்கள் தயாராக இருக்கிறார்கள் - எதிரிகள் ஏமாந்து போவார்கள் என்பதற்கு இதுதான் சரியான அடையாளம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

Comments  

 
#1 ethiraj 2017-12-02 17:51
இந்த செய்தினியினைப் படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது.
பாவேந்தர் வரிகள் நினைவுக்கு வருகின்றன
எங்கள் பகைவர் எங்கோ மறைந்திட்டார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner