எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அய்தராபாத், டிச.5 தமிழ்நாட்டைப் பின்பற்றி ஆந்திர மாநில சட்டப்பேரவையிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இட ஒதுக் கீட்டுக்கு வழிவகை செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்கு, காபு சமூகத்தினர், வேலைவாய்ப்பு, கல்வியில், தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி, ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தினர். கிழக்கு கோதாவரியில் நடந்த போராட்டங்கள், பயங்கர வன்முறைகளில் முடிந்தன. அம்மாவட்டத்தில், பல ரயில்கள் எரிக் கப்பட்டன; ரயில் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

கடந்த, 2014 இல், ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, ‘காபு சமூகத்திற்கு, இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன் படி, ஓய்வு பெற்ற நீதிபதி, மஞ்சுநாதா தலைமையில், ஆய்வுக் குழு அமைக் கப்பட்டு, காபு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆந்திர சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. காபு சமூகத்திற்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் இந்த மசோதா ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இதன்மூலம், உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக் காக நிர்ணயித் திருந்த, 50 சதவீத உச்சவரம்பிற்கும் அதிக மாக அளிக்க முடிவு செய்து சட்டமியற்றி யுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆந்தி ராவில், பிற்பட்ட வகுப்பினருக்கு, ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில், 29 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்.சி., பிரிவினருக்கு, 15 சதவீதமும், பழங்குடியி னருக்கு, 6 சதவீதமும் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. தற்போது, காபு சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத் தப்பட்டு, ‘எப்’ பிரிவில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, சட்டத்திருத்தம் இயற்ற ப்பட்டுள்ளது.

குறிப்பு: தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்த நிலையில், 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பின் காரணமாக சிக்கல் ஏற்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின் அடிப்படையில் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என்ற சட்ட அறிவை எடுத்துக் கூறி, அதற்கான மாதிரி மசோதாவையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தயாரித்துக் கொடுத்ததும், அதனடிப்படையில் தமிழ் நாடு சட்டப்பேரவையில், அ.தி.மு.க. ஆட்சியில் அம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அதன் பின் நாடா ளுமன்றத்தின் ஒப்புதலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று அரசமைப்புச் சட்டம் 9 ஆம்  அட்ட வணையிலும் சேர்க்கப்பட்டு, தமிழ் நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner