எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாட்னா, டிச.5 பீகார் மாநில பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி மகனின் திருமணம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.  இந்தத் திருமணத்தின்போது பாஜக கடுமையாக எதிர்த்துவரும் லாலுபிரசாத் யாதவ் கலந்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதள மற்றும் நிதீஷ் குமாரின் ஜனதாதளம் கட்சியின் கூட்டணியை உடைத்து, நிதீஷ்குமாரை தங்களுடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து பாஜக - ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது,

அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத் துள்ள லாலு பிரசாத்திற்கு பாஜகவின் இந்தப் போக்கு கடுமையான கோபத்தை ஏற்பத்தியது, அதே நேரத்தில் நிதிஷ்குமாரின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

சமீபத்தில் மத்திய அரசு லாலு பிரசாத்திற்கான சிறப்பு பாதுகாப்பை முற்றிலும் அகற்றியது. பீகார் காவல்துறையும் லாலுவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறி தவிர்த்து வருகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதிலும், திங்களன்று நடந்த சுஷில் குமார் மோடி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட லாலுபிரசாத், மணமக்களுக்கு வாழ்த்துக்கூறி, அனைத்து தலைவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு திருமண நிகழ்ச்சியில் இறுதிவரை கலந்துகொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner