எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், டிச.6 குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக் கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதீய ஜனதா அரசு கடும் முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் தேர்தல் நாடு முழு வதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-  ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே  அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற தேர்தல் ஆணையம் முதற்கொண்டு உள்ளூர் நிர்வாகம் வரை மோடிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக தேர் தல் தேதியை அறிவிக்கும் முன்பே தேர்தல் முடிவு வெளியாகும் தேதியை அறிவித்து விட்டு தேர்தல் தேதி 2 வாரங்களுக்குப் பிறகு தான் வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் மோடி  உள்ளூர் படகு சேவை, நர்மதா குடிநீர்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை குஜராத் முழுவதும் சுற்றி சுற்றி வந்து அறிவித்தார்.

அரசின் அமைப்புகளே இவ்வாறு இருக் கும்போது ஊடகங்கள் மோடியின் பக்கம் முழுமையாகவே சாய்ந்துவிட்டன. அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பாஜக 30 சட்டமன்றத் தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்தையுமே கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறது என்று தொடர்ந்து கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டு வந்தன.

இந்நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில்  பாஜகவுக்கும், காங்கிரசு கட்சிக்கும் சமவாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுவரும் பாரதீய ஜனதா, தற்போது நாட்டில் அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் பெரும் பாதிப் புகளை சந்தித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வியாபாரிகள் குஜராத்தில் உள்ளனர். அவர்கள் மோடி அமல்படுத்திய புதிய திட்டங்களால் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக, அங்கு அதிகமாக வசித்து வரும் பட்டேல் இனத்தவர்கள் கூறி உள்ளனர். பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதன் காரணமாக குஜராத்தில் பாஜக தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து வருகிறது. தற்போதைய நிலையில், குஜராத் தில் பாஜகவும், காங்கிரசும் ஒரே நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

இந்நிலையில், சிடிஎஸ்  லோக்நிதி நிறு வனம் நடத்திய இறுதி கட்ட கருத்துக் கணிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

அதில், பாஜக, காங்கிரசு ஆகிய இரண்டு கட்சிகளும் 43 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரே நிலையில் இருப்பதாக கூறப் பட்டுள்ளது. மேலும், தற்போதைய நில வரப்படி பாஜகவின் செல்வாக்கு பலமடங்கு சரிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக் கணிப்பில் பாஜக 59 சதவிகித வாக்குகள் பெறும் என்ற நிலையில் தற்போது எடுத் துள்ள கருத்துக் கணிப்பில் 43 சதவிகித வாக்கு களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதாவது ஆகஸ்டு மாதத்தில் 59 சதவிகிதம் இருந்த பாஜக ஆதரவு படிப்படியாகக் குறைந்து, அக்டோபரில் 47 சதவிகிதாகவும், நவம்பரில் அது 43 சதவிகிதமாவும் கடந்த 4 மாதங்களில் 16 சதவிகித வாக்குகளை பா.ஜ.க. இழந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

அதே நேரத்தில், கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது இழந்த செல்வாக்கை மீட்டு வருகிறது.

அதாவது, கடந்த  ஆகஸ்டு மாதத்தில் 29 சதவிகிதமாக  இருந்த காங்கிரசு செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து, அக்டோபரில் 41 சதவிகிதமாகவும், நவம்பரில் அது 43 சதவிகித மாகவும் உயர்ந்து பெரும் சாதனை படைத் துள்ளது.  கடந்த 4 மாதங்களில் 14 சதவிகித வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது.

அதேவேளையில், மோடியின் செயல்பாடு குறித்தும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 82 சதவிகிதம் பெற்றிருந்த அவரது புகழ் படிப்படியாகக் குறைந்து தற்போது 64 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. இது மோடிக்கு மிகப்பெரிய சரிவு என்றும்,

அதே வேளையில், ராகுல்காந்தியின் மதிப்பு  40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சிடிஎஸ் - லோக்நிதி நிறுவனம் நடத்திய இறுதி கட்ட கருத்துக் கணிப்பில், குஜராத்தில் பெண்களின் வாக்கு காங்கிரசுக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது

இந்த கருத்துக்கணிப்பு   கடந்த நவம்பர் 23 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை, 50 தொகுதிகளில் உள்ள 200 வாக்கு மய்யங்களில் 3,655 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது என்றும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதன் காரணமாக குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி கலக்கத்தில் உள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருந்த நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு பாஜகவினரைக் கலக்கமடையச்செய்துள்ளது.   முக்கியமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்களின் ஆதரவு முழுமையாக காங்கிரசுக்கு போய்ச்சென்று சேர்ந்த நிலையில் தற்போது வெற்றிக்குத்தேவையான படேல் இன வாக்குகளும் காங்கிரசுக்கு செல்கிறது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரசு வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner