எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டப் பகலில் பகிரங்கமாக!

மாட்டிறைச்சிக் கொலைக்குப் பிறகு தற்போது லவ்ஜிகாத் கொலை

இந்துத்துவ அமைப்பினரின் வெறிச்செயல்!

ஜெய்பூர், டிச.7 இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை காதலித்தால் அவர்களுக்கு என்ன தண்டனை  கிடைக்கும் என்பதைக் காட்ட முதியவர் ஒருவரை அடித்து கோடாரி யால் வெட்டி கொலை செய்த பிறகு, அவரது உடலை எரித்துவிட்டு ஒருமணிநேரம் லவ்ஜிகாத், இந்துமத துரோகிகள் யார்? தற்போதைய அரசுக்கு எதிரிகளுக்கும் இதே நிலை தான் என்றெல்லாம் காணொலியில் பதிவு செய்ததுமல்லாமல், 5 பக்க எச்சரிக் கைக் கடிதம் ஒன்றையும் அங்கே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.  இச்சம்பவம் முழு வதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்னால் பாதி எரிந்த நிலையில் உள்ள உடல் ஒன்றை நாய்கள் குதறிக்கொண்டு இருப்பதாக காவல் துறைக்கு ஆட்சியர் அலுவலக காவலாளி தகவல் தெரிவித்தார். நிகழ்விடத்திற்கு வந்த ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் அங்கி ருந்த நாய்களை விரட்டி உடலை கைப்பற்றி  பரி சோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் உடலின் பல இடங் களில் பலமான வெட்டுக்காயங்கள் இருந்தன.

விசாரணையில் இறந்துகிடந்த நபர் அப்பகுதியைச்சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரரும், இந்துத்துவ அமைப்பின் முக்கிய நபருமான சம்புலால் என்பவரிடம் பணிபுரிந்து வந்தவர் என்றும், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஃப்ரஜூல் (வயது 55) என்றும் தெரிய வந்தது.

இந்த நிலையில் வட இந்தியா முழுவதும் இந்துஅமைப்பின் பெயரில் ஒருமணிநேரக் காணொலி ஒன்று சமூகவலைதளம், வாட்ஸ்-அப், மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. அதில் ஒருவர் ஒரு முதியவரை அடித்து கோடாரியால் வெட்டுகிறார். பிறகு கையில் இருந்த பெட்ரோல் கேனில் இருந்து அந்த குற்றுயிராய் இருந்த முதியவர் மீது பெட் ரோலை ஊற்றி எரிக்கிறார். பிறகு பாதி எரிந்த உடலின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகிறார்.  அதன் பிறகு அவர் ஒரு மணிநேரம் வசனம் பேசுகிறார்.

இந்துக்களுக்கு அனைவரும் அடிமையாக இருக்கவேண்டுமாம்!

அதில் "இந்த நாடு இந்துக்களுக்கான நாடு, இங்கே மற்றவர்களுக்கு இடமில்லை, மற்றவர்கள் இருந்தால் அவர்கள் இந்துக் களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண் டும். அப்படி அடிமையாக இருப்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது, வணிகம் செய் யக்கூடாது, சம்பளம் வாங்கும் வேலைப் பார்க்கக்கூடாது, அவர்களின் பெண் குழந்தை களை இந்துக்களுக்கு பாலியல் சேவை செய்யவிட்டுவிடவேண்டும், அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைத்தான் வளர்க்க வேண்டும்.

இந்துக்கள் அல்லாத பெண்கள் மேலாடை அணியக்கூடாது, ஆண்கள் இடுப்பில் துண்டுமட்டுமே கட்டியிருக்கவேண்டும்.  அவர்கள் பொது இடங்களில் நடக்ககூடாது, அப்படி நடந்தால் அவர்களின் கால்களை வெட்டிவிடவேண்டும். இந்த நாட்டில் இந்துக் கோவிலைத் தவிர வேறு எந்த ஒரு வழிபாட்டுத்தலமும் இருக்கக்கூடாது" என்று இந்து மதம் பற்றிப் பேசுகிறார்

இந்து அரசு

மேலும் "இப்போது இந்து அரசு நடந்துவருகிறது, இந்த அரசுக்கு எதிராக யார் பேசினாலும் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு இஸ்லாமியனுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்! இந்த அரசும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தால் அது அகற்றப்படும். உண்மையான தேசபக்தி இருந்தால் இந்த காணொலியை அதிகம் பேருக்கு பகிரவும்; ஒவ்வொரு இந்துவும் இந்த காணொலியைப் பார்த்து இஸ்லாமி யர்களுக்கு எதிராக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

சட்டம், காவல்துறை, சிறை பற்றி எல்லாம் கவலைப்படவேண்டாம் தற்போது நடப்பது நமது ஆட்சி, ஆகையால் இஸ்லாமி யர்களுக்கு எதிராக பயமின்றி துணிச்சலுடன் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யுங்கள். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் தேசத்துரோகிகள். இந்த நாட்டில் இருக்க தகுதியற்றவர்கள்.

உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொலை செய்யுங்கள்!

இந்துமதம் மட்டுமே யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று வகுத்துள்ளது. ஆகையால் தான் இந்தியா உலக அளவில் பெருமையுடன் நிற்கிறது. உலக அளவில் இந்துமதம் மட்டுமே உள்ளது, மற்றவை எல்லாம் மனித குலத்திற்கு எதிராக உருவாக் கப்பட்டவைகள்.

உங்கள் வீட்டுப் பெண் ஒரு இஸ்லாமி யனைக் காதலித்தால் தயங்காமல் அவனை கொலைசெய்யுங்கள், உங்கள் பெண் உங்கள் பேச்சைக் கேட்காவிட்டால் அவளையும் கொலை செய்யுங்கள், இந்துக்களுக்கு எதிராக ஒரு உயிர் இருப்பது நாட்டிற்கு ஆபத்து, அனைத்து இந்துக்களும் இஸ்லாமியரை நான் என்ன செய்தேனோ அதை செய்ய ஆர்வமுடன் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் அச்சம் உள்ளது, அந்த அச்சத்தை விலக்கிவிடுங்கள். காவல்துறை நம்முடையதுதான், கைது செய்வார்கள் பிறகு விட்டுவிடுவார்கள். நமக்கு இந்துச்சட்டம் மட்டுமே சட்டம், மற்றவை எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது. நீங்கள் இந்துவாக இருந்தால் இஸ்லாமியர்களைக் கொலைசெய்ய தயங்கவேண்டாம்" என்று பேசுகிறார்.

அவர் பேசியதை 5 பக்கக் கடிதமாக எழுதி வீசிச் சென்றும் இருக்கிறார்

இந்த காணொலியை ஆய்வு செய்த ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் நடந்த நிகழ்வோடு இது தொடர்புடையது என்பதை உறுதிசெய்தனர். மேலும் கொலை செய்தவர் சம்புலால் என்ற ஈஸ்வர்மகானி என்பதையும், இவர் உள்ளூர் இந்து அமைப்பின் முக்கிய உறுப்பினராக உள்ளார் என்பதையும் கண்டறிந்தனர்.

இவர் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். மேலும் கொலைசெய்யப்பட்ட முதியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், நீண்ட காலமாக சம்புலாலிடம் வேலைசெய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. கொலைசெய்த சம்புலாலை தேடிச்சென்ற போது அவர் குடும்பத்துடன் தப்பிவிட்டார். அவரைச் சார்ந்த இந்து அமைப்பினரிடம் விசாரணை செய்த போது அவருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டனர்.

காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: "நிகழ்விடத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் இருந்துள்ளனர். ஒருவர் நிகழ்வைப் படம் பிடித்துள்ளார். சம்புலால் கொலைசெய்துள்ளார். இச்சம்பவத்தில் மூன்றாம் நபர் ஒருவரின் குரலும் கேட்கிறது. ஆகவே மூன்று பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் இந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்புள்ளது. சம்புலாலைத் தேடிவருகிறோம். அவரைக் கைது செய்த பிறகு உண்மைகள் வெளிவரும்" என்று ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் கூறினர்.

கொலையை  ஊக்குவித்த அரசு

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நவம்பர் 20 ஆம் தேதி இந்து அமைப்பினரின் கண்காட்சி மற்றும் 2 நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் கலந்து கொள்ள வேண்டுமென ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த மாநாட்டில் தரப்பட்ட கையேடு போன்ற குறு நூல் ஒன்றில் லவ் ஜிகாத் குறித்தும், அதிலிருந்து பெற்றோர்கள் எவ்வாறு பிள்ளைகளை காத்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் லல்ஜிகாத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களை என்ன செய்யவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

"அவர்கள்மீது போலி வழக்குகள் பதிவு செய்யவேண்டும், அவர்களை திருடர்கள் என்று கூறி பொது இடத்தில் அடிக்கவேண்டும், அவர்களை கொலை செய்ய பயப்படக்கூடாது, காவல்துறையிடம் அவர்கள் பிணையில் வெளிவராத அளவிற்கு வழக்குகள் பதிய வற்புறுத்தவேண்டும். அவர்கள் இந்துப்பெண்களை திருமணம் செய்துவிட்டால் இந்துப்பெண்களின் பெயரில் போலிச் சான்றிதழ் தயாரித்து அவர்களை திருமண வயதுக்குரியவர்கள் அல்ல என்று காண்பித்து உங்கள் பிள்ளைகளை காவல்துறையினர் மூலமாக வீட்டிற்கு அழைத்துவந்து அவர்களை புனிதப்படுத்துங்கள். இஸ்லாமியர்களை திருமணம் முடித்த இந்துப் பெண்கள்மீது இரக்கம் காட்டாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

2015-ஆம் ஆண்டு மாட்டிறைச்சி தொடர்பாக ஊரே ஒன்று கூடி உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள பிசாடா என்ற கிராமத்தில் முகமது அக்லாக் என்ற முதியவரை அடித்து கொலை செய்தனர். அதன் பிறகு மாட்டிறைச்சி விவகாரத்தில் கொலை செய்யப்படுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிவிட்டது. தற்போது லவ்ஜிகாத் என்ற பெயரில் முதியவர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்து எல்லா இந்துக்களும் இப்படி கொலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner