எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தினகரன் என்ற பெயரில் நால் வரும், மதுசூதனன் என்ற பெயரில் மூவரும் போட்டி.

* சென்னை உயர்நீதிமன்றத் திற்கு புதிதாக 9 நீதிபதிகளுக்குப் பரிந்துரை.

* பல வளர்ந்த நாடுகளி லேயே வாக்குச் சீட்டைப் பயன் படுத்தும்போது, அந்த முறையை இந்தியாவிலும் பயன்படுத்தி னால் என்ன என்று கேள்வி எழுப்பி யுள்ளார் உ.பி. மேனாள் முதல் அமைச்சர் அகிலேஷ்.

* 1995ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவில் விவசா யிகள் 12 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக அன்னா அசாரே கூறுகிறார்.

* மக்கள் தொகையில் 11 சதவீதம் கலப்பு மணம் செய்து கொள்வதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

* 2017 ஏப்ரல் முதல் நவம் பர் வரையிலான கால கட்டத் தில் எல்.அய்.சி. நிறுவனம் ரூ.44 ஆயிரம் கோடியை பங்கு சந் தையில் முதலீடு செய்துள்ளது.

* அனைத்துப் பள்ளிகளி லும் கண்காணிப்புக் கேமரா வைக்கப்பட வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

* ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் 28 சுயேச் சைகள் தொப்பி சின்னம் கேட்பதால் குலுக்கல் முறையில் அறிவிக் கப்படுமாம்.

* ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்ப் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப் பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் தண்டை யார்ப்பேட்டை மாநகராட்சி அலுவலகம் முன்முற்றுகை.

* சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு மேனாள் அமைச்சர் (அதிமுக), வி.வி. சாமிநாதன் அறிக்கை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner