எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1993 ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர்ப் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.

ஆளுநர் அங்கு சென்றதற்கு ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தார். 1995 இல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். அதையும் எளிதில் விடவில்லை முதலமைச்சர் ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி, ஜெயலலிதா விடுத்த அறிக்கை காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக்கூடாது என்றும் கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

அம்மா ‘ஆன்மா’ ‘ஆன்மா’ என்று அடிக்கொரு தடவை ‘திருவாய்’ மலரும் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு விவகாரங்களில் மூக்கை நுழைத்த ஆளுநரை உண்டு இல்லை என்று பார்த்தாரே முதல்வர் ஜெயலலிதா, இப்பொழுதும் ஆளுநர் தலையீட்டை ‘ஆகா ஊகா’ என்று புகழுவதை அம்மா ‘ஆன்மா’(?) மன்னிக்குமா?

அம்மா - வெறும் துருப்புச் சீட்டுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner