எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, டிச.9 குஜராத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 22 ஆண்டு ஆட்சியில் பாஜ என்ன செய்தது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு தினமும் ஒரு கேள்வியை கேட்டு வருகிறார். அதன்படி, நேற்று அவர் தனது 10 ஆவது கேள்வியை கேட்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவில், பழங்குடியினரின் நிலத்தை பறித்துக் கொண்டீர்கள். வனப் பகுதிகளில் அவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை.  பள்ளிகள் செயல்படவில்லை. மருத்துவமனையும் அவர்களுக்கு கிடையாது. நிலமற்றவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்துவதாக கூறிய ரூ.55 ஆயிரம் கோடி வன்பந்து திட்டம் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner