எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, டிச.9 மோடியின் அரசு மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப் புற விளம்பரத்திற்கு 3,755 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார் ஆர்.டி.அய்.மூலம் இந்தப் பதிலை பெற்றுள்ளார்.

ஆர்.டி.அய்.மூலம் பெறப் பட்டுள்ள தகவலின்படி மத்திய அரசு ரேடியோ, டிஜிட்டல் சினிமா, அரசு தொலைக்காட்சி, இணைய தளம், குறுந்தகவல் மற்றும் தொலைக்காட்சி போன்ற மின்னணு ஊடகங் களில்வெளியிடப்பட்ட விளம் பரத்திற்கு ரூ. 1,656 கோடி செலவு செய்து உள்ளது. அச்சு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களுக்கு ரூ. 1,698 கோடி செலவு செய்து உள்ளது. பேனர்கள், போஸ்டர்கள், காலண்டர்கள் போன்ற பிற வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ. 399 கோடி செலவு செய்து உள்ளது என தெரியவந்து உள் ளது.

விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையானது சில முக்கியமான அமைச்சகம் மற்றும் முக்கியமான திட்டங் களுக்குஅரசுஆண்டுபட் ஜெட்டில் ஒதுக்கும் தொகை யைவிட அதிகமானது. அரசு மாசு கட்டுப்பாட்டிற்கு அரசு ஒதுக்கும் தொகையானது கடந்த மூன்று வருடங்களாக ரூ. 56.8 கோடியாக உள்ளது. பிரதமர் மோடி மாதம் தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார், இதற்காக ஜூலை 2015 வரையில் விளம்பரம் செய்யப்பட்டதற்கு ரூ. 8.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என மற்றொரு ஆர்.டி.அய். மூலம் தெரியவந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner