எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், டிச.9 மத்திய பிரதேச மாநிலத்தில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாநில அமைச்சருக்கு, கைது ஆணையை பிண்ட் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் பிறப்பித் துள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலை மையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவரது அமைச் சரவையில், மாநில பொது நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர், லால் சிங் ஆர்யா. கடந்த, 2009 இல், காங்., - எம்.எல்.ஏ., மக்கன் லால் ஜாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் லால் சிங், இணைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் மீதான விசாரணைக்கு நீதிமன்றத் தில் ஆஜராகும்படி, ஆறு முறை, அழைப்பாணை’ அனுப்பப் பட்டது. ஆனால், ஒருமுறை கூட, நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராகவில்லை.

இது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வந்ததையடுத்து, அடுத்த விசாரணைக்குள், அமைச்சரை கைது செய்யும்படி, காவல் துறையினருக்கு பிண்ட் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner