எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, டிச. 10 புதுவை தொழில்-வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

புதுவையில் வாட்வரி இருந்த போது மாதந்தோறும் ரூ.165 கோடி வருவாய் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வரியால் புதுவையில் மாதம் ரூ. 40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வரிவருவாய் குறைந்ததால் மாநில வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும். எனவே ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு ஏற்பட்டால் 5 ஆண்டுக்கான நிதியை மத்தியஅரசுதான் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

புதுவையில் வணிகர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய அரசு முழுமையான பாதுகாப்பு அளிக்கும். வணிகர்களுக்கு மத்திய அரசைவிட புதுவை அரசு கூடுதல் சலுகைகளை அளிக்கும். புதுவையில் கட்ட பஞ்சாயத்து ரவுடிகளை முழுவதுமாக ஒடுக்கி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner