எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருப்பூர், டிச.10  திருப்பூரில் திருமாவளவன் தலைக்கு ரூ. ஒரு கோடி பரிசு அறிவித்த இந்து முன்னேற்ற கழக தலை வர் கோபிநாத்தை வடக்கு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

கடந்த 6ஆம் தேதி பெரம் பூரில் நடைபெற்ற தலித் இஸ் லாமிய எழுச்சி பொதுக்கூட் டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர்திருமாவளவன் இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி, புத்த விகா ரங்களை கட்ட வேண்டும் என பேசியதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்,  தொல்.திருமாவளவன் தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு 1 கோடி பரிசளிக் கப்படும் என இந்து முன் னேற்ற கழக  நிறுவனத் தலை வர் கோபிநாத்  கூறியதாக தெரிகிறது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய கோபி நாத்தை வன் கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனக் கோரி திருப்பூர் மாவட்ட வி.சி.கட்சியினர் நேற்று (9.12.2017) திருப்பூர் வடக்கு காவல்துறையில் மனு அளித் தனர்.

இந்நிலையில், அக்கட்சி யின் ஒரு சிலர் வடக்கு காவல் நிலையத்திற்கு முன்பாக குமரன் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு காவல் துறை உதவி ஆணையர் அண் ணாத்துரை நடவடிக்கை எடுப் பதாக அவர்களுக்கு உறுதி யளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப் பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதையடுத்து, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இந்து முன்னேற்ற கழக நிறு வன தலைவர் கோபிநாத்தை வடக்கு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner