எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெயங்கொண்டம், டிச.10 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகில் உள்ள மேலணிக்குழி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது.இதில் அதே கிரா மத்தை சேர்ந்த ராமலிங்கம் (62) என்பவர் பூசாரியாக இருந்து பூஜை செய்து வருகின்றார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமலிங்கம் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் முன்பக்க இரும்புகேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவிலின் தர்மகர்த்தா சாமியப்பன் (60) என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் மீன்சுருட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கென்னடி மீன்சுருட்டி காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் மேலணிக்குழி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் கோவிலில் கருவறையிலிருந்த அம்மன் சிலை திருட்டு போய் இருப்பதும், திருடுபோன ஒன்றரை அடி உயரமுள்ள சுமார் 25 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை வெண்கலமா, அய்ம்பொன்னா என்றும், திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்களையும் மீன்சுருட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner