எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, டிச.12 தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய் துள்ளமேல்முறையீட்டுமனு வுக்குமத்தியஅரசும்,குமரி மகாசபையும்4வாரங்களில் பதி லளிக்க உத்தரவிடப்பட்டுள் ளது.

தமிழகத்தில் நவோதயா பள் ளிகள் தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகாசபையின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத் திய அரசு 1986- ஆம் ஆண்டு நாடுமுழுவதும்ஜவஹர்நவோ தயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது.உண்டுஉறை விடப் பள்ளியான இருபாலர் பயிலும்பள்ளியில்6 ஆம்வகுப்புமுதல்12ஆம் வகுப்புவரை கற்பிக்கப்படு கிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங் குவதற்கு ஆரம்பம் முதல் தமிழக அரசு எதிர்ப்பு தெரி வித்து வந்தது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை நடை முறையில் இருப்பதால் நவோ தயா பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்பள்ளியை தொடங்க வேண்டும் என் றால் அமைச்சரவைதான் முடி வெடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசு இடம் வழங்கி தடையில்லாச் சான்றிதழ் வழங் கினால், வரும் கல்வி ஆண்டில் இருந்தே நவோதயா பள்ளிகள் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என மாநில அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டபோது,தற்போதுநவோ தயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்புமுதல்10ஆம் வகுப்பு வரைமாநிலமொழி முதன் மைப்பாடமாகவும்,மேல் நிலைவகுப்புகளில்விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படு கிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 ஆம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தேவையான இடம் உள்ளிட்ட கட்டமைப்புவசதிகளை வழங் குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்திற்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என செப். 11- ஆம் தேதி உத்தர விட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அதில்,தமி ழகத்தில் நவோதயா பள்ளி களைஅவசரகதியில் தொடங்க வாய்ப்பில்லை. நவோதயா பள்ளிகள் தொடங்க மாவட் டம்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கவேண்டும்என்றுகோரப் பட்டுள்ளது.இந்தளவுபோதிய இடவசதி இல்லை. உயர்நீதி மன்ற கிளை போதிய அவ காசம் தரவில்லை. இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை யின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் நேற்று (11.12.2017)விசாரணைக்கு வந் தது. விசாரணைக்குப்பின் தமிழ கத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மேல் முறையீடு தொடர்பாக மத்திய அரசும், குமரி மகாசபை செய லரும் 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய் யவும் தலைமை நீதிபதி உத்தர விட்டார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner