எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகாகவி என்று சொல்லப் படுபவர் சுப்பிரமணிய பாரதி யார். அவர் மகாகவி என்று சொல்லப்பட்டபோது சர்ச்சை கள் கிளம்பியதுண்டு (‘கல்கி' கிருஷ்ணமூர்த்தி உட்பட). சீர் திருத்தப் பாடல்களையும் பாடி யுள்ளார். பிற்போக்குத்தனமாக வும் தம் எழுதுகோலை அவர் சுழற்றியதுண்டு.

பாரதியாரைப்பற்றி எதிரும் புதிருமான கருத்துகள் இப் பொழுதும் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.

அதேநேரத்தில், அவர் சொன்ன முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைத் திட்டமிட்டு மறைப்பதில் உள் நோக்கம் இருக்கவே செய்கிறது!

எடுத்துக்காட்டாக...

‘‘இங்கிலாந்தில் செருப்புத் தைக்கும் பையன் ஒருவன், தேவையான தகுதியிருந்தால், அந்த நாட்டின் பிரதமராகவே வர முடியும் என்பதில் யாருக் கும் சந்தேகம் உண்டா? ஆனால், இந்தியாவில் ஒரு சூத்திரன் சமஸ்கிருத சாஸ் திரங்களில் இணையற்ற அறி வாற்றலும், நற்பண்பும், தெய் வநம்பிக்கையும் உடையவ னாக இருப்பினும், சிருங்கேரி (சங்கராச்சாரி) மடத்தின் தலை வராக ஆசைப்படுவது பெருந் துரோகம் என்று இந்தியாவில் கருதப்படும் அன்றோ? சூத் திரனுக்கு அந்த நிலை என்றால், பஞ்சமனுக்குக் கேட்கவே வேண்டாம்!’’

இதுவும் பாரதியின் கூற்று தான். (1904 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாளன்று ‘இந்து’ நாளிதழுக்கு பாரதி எழுதிய கடிதம். கேரளத்து சங் கரன் நாயர் அந்நாளில் வெளிப் படுத்திய சமூக சீர்திருத்தம் பற்றிய கருத்துகளை ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஆதரவாக பாரதியார் எழுதிய கடிதத்தில் காணப்படுவதுதான் இந்தக் கருத்து).

பாரதியாரின் இதுபோன்ற கருத்துகளை இருட்டடிப்பது ஏன்?

1904 ஆம் ஆண்டு பாரதி யார் எதைச் சொன்னாரோ, அந்த நிலைதானே இன்று வரைக்கும்?

சங்கராச்சாரியார் வரை கூடப் போகவேண்டாம்; ஆக மப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அதில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றாலும், சூத்திரனும், பஞ்சமனும் அர்ச்சகனானால் சாமி தீட்டுப்பட்டு விடும்; செத்தே போய்விடும் என்கி றார்களே! நீதிமன்றம் செல்லு கிறார்களே!

சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப் புக்கு வேறொரு நீதி என்று சாத்திரம் சொல்லிடுமாயின் சாத்திரமன்று சதியென்று கொண்டோம் என்று பாரதி கூறியதை எடுத்துக் கூறிதான் சாட்டையடி கொடுக்கவேண்டி யுள்ளது.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner