எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

"சாக்ஷி மகாராஜைப் போலவே சாத்வி நிரஞ்ஜன் ஜோதியின் வெறுப்புப் பேச்சும் அதிக எதிர்ப்புகளுக்கு உள்ளா னது. டில்லி சட்டமன்ற தேர் தலை ஒட்டி, நடைபெற்ற தேர் தல் பிரச்சாரத்தில் "டில்லியில் ராமருக்குப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா? அல்லது முறைகேடாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" எனப் பேசினார் சாத்வி நிரஞ்ஜன்.

பா.ஜ.க.வை சேராதவர்களை நோக்கி முறைகேடாகப் பிறந்த வர்கள் என்று சொன்ன இவர் தான் இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறையின் அமைச்சர். இதுதான் மோடி அமைச்சரவையின் இலட் சணம்.

இவரைப் போலவே இன் னொரு சாத்வி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வின் பெண் சாமியாரான சாத்வி பிராச்சி. "முஸ்லிம்கள் இல்லாத இந்தி யாவை உருவாக்குவோம். அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவோம். ஷாருக்கானைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண் டும்" உள்ளிட்டவையெல்லாம் இவரது விஷ முத்துக்களாகும். மேலும் "இஸ்லாமியப் பிரச்சார கரான ஜாகீர் நாயக்கின் தலை யைத் துண்டித்தால் ரூபாய் 50 லட்சம் பரிசு வழங்கப்படும்" எனப் பேசிய பெண் துறவிதான் இந்தப் பிராச்சி.

தலைக்கு விலை பேசும் போக்கு இந்தப் பா.ஜ.க. கும்ப லுக்கே உரித்தான ஒன்றாகும். அப்படியான ஒன்றுதான் சாத்வி யிடமிருந்து வெளிப்பட்டிருக் கிறது. இதற்கு முன்னர், தமிழ கத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞரின் தலைக்கு எடைக்கு எடை தங்கம் என்று அறிவித் தார் உத்தரப் பிரதேசத்தின் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி. இப்பொழுது மோடியின் ஆட்சியில் அது இன்னும் வலுவடைந்துள்ளது.

சாத்வியாவது அதிகாரத்தில் இல்லாத ஜாகீர் நாயக்கின் தலைக்குத்தான் விலை அறி வித்தார். ஆனால் மத்தியப் பிரதேசத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவரான குந்தன் சந்திரவாத் என்பவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சரான பினராயி விஜயனின் தலைக்கு 11 கோடி ரூபாய் அளிப்பதாகவும், மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் ரூபாய், பரிசாகக் கொடுப்பதாக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் யோகேஷ் வர்ஷ்னேவும் பகிரங்கமாக அறிவிப்புகளை சமீபத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். இப்படியாக சங்பரிவார் கும்பல்களின் கரங்கள் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின்மீது நேரடியான தாக்குதலையே நடத்தி விட் டன" (இன்னும் ஏராளம் உண்டு).

இவ்வளவுத் தகவல்களும் இடம் பெற்ற நூல்: "மோடி ஏன் நமக்கானவர் அல்ல?"

நூலின் ஆசிரியர் பழனி ஷஹான்.

தொடர்புக்கு 04362-227760

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner