எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாரணாசி, டிச.16 வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேள்வித்தாளில்  முத்தலாக், ஹலாலா மற்றும் பத்மாவதி ஆகியவை பற்றிய இந்துத்வா கேள்விகளுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தில் வரலாற்றுப் பிரிவு முதுகலை பயில்வோருக்கான தேர்வுகள் சமீபத் தில் நடந்துள்ளன. அதில் தற்போதைய நிகழ்வுகளை ஒட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள் விகள் இந்துத்வா கொள்கைகளை முன்னிறுத்தி கேட்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

"முத்தலாக் மற்றும் ஹலாலா முறையால் இசுலாமிய சமூகத்தினர் படும் துயரத்தை விவரிக்கவும்" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.   முத்த லாக் என்பது ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி ஒரு ஆண் பெண்ணை விவாகரத்து செய்வதாகும்.   ஹலாலா என்பது ஒரு இசுலாமியப் பெண் விவாகரத்துக்குப் பின் தனது முதல் கணவனை திருமணம் செய்ய விரும்பினால்,  அவள் மற்றொருவனை திருமணம் செய்து அவனுடன் வாழ்ந்து விட்டு விவாகரத்து செய்த பின்பே மணக்க முடியும் என்னும் பழக்கமாகும்.  இந்தக் கேள்வி கேட் கப்பட்டது இசுலாமியரை வேண்டும் என்றே கேவலம் செய்வதற்காகவே என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரலாற்று நிகழ்வு குறித்த பாடத்தில்  "அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் ராணி பத்மாவதி தீக்குளித் ததை பற்றி விளக்குக?" என்பதாகும். இது பழங்கால ராணி பத்மாவதியை பற்றிய கேள்வி போல தோற்றமளித் தாலும் அது தற்போது சர்ச்சைக்குள் ளாகிய பத்மாவதி இந்தி திரைப் படத்தையும், அந்தப் படத்தை தடை செய்ய இந்து அமைப்புகள் போராடி வருவதையும் குறித்து கேட்கப்பட்டுள் ளது என மாணவர்கள் கருதுகின்றனர்.

அரசியல் விஞ்ஞானத்துறையில் (றிஷீறீவீtவீநீணீறீ ஷிநீவீமீஸீநீமீ) முதுகலைப் பட்டப் படிப்பில் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வியில் "கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி. பற்றி வந் துள்ளதை பற்றி ஒரு கட்டுரை எழு தவும் அல்லது உலக மயமாக்கலின் முன்னோடி மனுதர்மத்தை எழுதிய மனு என ஒரு கட்டுரை எழுதவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் மாணவர்களிடையே கண்டனத்தை எழுப்பி உள்ளது.

மாணவர்களில் ஒருவர், "இது போன்ற கேள்விகளின் மூலம் பல் கலைக்கழகம் இந்துத்வாவை புகுத்த நினைக்கிறது.  அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.   இந்தக் கேள்விகளால் தேவையற்ற மதக் கல வரம் நிகழலாம் என அஞ்சுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரித்திரத் துறையில் பணி புரியும் பேராசிரியர் ஒருவர், "இது போன்ற கேள்விகள் பல ஆண் டுகளாக இந்தப் பல்கலைக்கழகத்தில் கேள்விகளாக கேட்பது கலாச்சாரமாகி விட்டது.   பாஜக ஆட்சிக்கு வந்த பின் மேலும் அதிகரித்துள்ளது. ஆட் சியாளர்களால் இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்துத்வா திணிப்பு மிக வும் அதிகரித்துள்ளது.  வெகு நாட் களாக நடந்து வரும் இந்த வழக்கம் இப்போது வெளியே தெரிந்ததற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்" எனக் கூறி உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner