எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.16 டில்லியில் கரோல் பாக் பகுதியில் சட்ட விரோதமாக 108 அடி உயரத்தில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ளது குறித்து வேதனை வெளியிட்ட டில்லி உயர்நீதிமன்றம், கோயில் கள் சட்ட விரோதமாகக் கட் டப்பட்டால், அதற்கு அனுமதி அளிக்கின்ற அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளது.

டில்லியில் சட்ட விரோத மாக பொது இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்த வழக் கின் விசாரணை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற் றும் நீதிபதி சி.அரிசங்கர் ஆகி யோரைக்கொண்ட அமர்வு முன்பாக வந்தபோது, சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கும் அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்யப் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

டில்லி கரோல் பாக் பகுதியில் நடை பாதை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடந்த 2002 ஆம் ஆண்டில் 108 அடி உயர அனுமன் சிலை யுடன் கோயில் அமைக்கப்பட்டது.

கரோல் பாக் பகுதியில் பொது இடங்கள் ஆக்கிர மிப்புகள்குறித்து டில்லி உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது.

சட்டவிரோதமான ஆக்கிர மிப்புகளின் மூலமாக வழிபட் டால்தான் நமது வேண்டுதல் கள் கடவுளைச் சென்று சேருமா? என்று டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்ட கோயிலை நாங்கள் (நீதிமன்றம்) அகற்றா விட்டால், அதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகளுக்கு அதற்குரியவர்களே பொறுப் பேற்கவேண்டும் என்று நீதி பதிகள் குறிப்பிட்டனர்.

108 அடி உயர அனுமன் சிலையுடன் கோயிலை அமைத்தவர்கள், அதற் குரிய நிர்வாகிகள்,  நன்கொடை யாளர்கள் மற்றும் சம்பந் தப்பட்ட அனைவருடைய விவரங்களையும் அளித்திட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டில்லி பெருநகருக்குரிய பொது இடம் மற்றும் டில்லி பெருநகரக் கட்டுப்பாட்டில் உள்ள சாலை மற்றும் சாலையையொட்டிய நடை பாதை பகுதிகளையும் ஆக்கிரமித்து, அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை சார்பில், வழக்கில் நேர்நின்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டில்லி கரோல் பாக் பகுதியில் பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்ட டங்கள் கட்டப்படுவது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணையில், பொது இடங்கள் தனி நபர்களின் லாபத்துக்காக, மற்றவர்களின் உரிமைகள் பறிபோவதை அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே நீதிமன்றம் எச்சரித்தது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner