எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், டிச. 16 மத்தியப் பிரதேச மாநிலத் தில் சத்னா என்னும் இடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த கல்லூரி மாணவர் களை அடித்து விரட்டியதுமல்லாமல் அவர்கள் வந்த வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில்  கிறிஸ்த வர்கள் அதிகம் வாழும் பகுதியான சத்னா நகரத்தில் உள்ள செயிண்ட் எஃப்ரேம் கிறிஸ் தவக் கல்லூரி இளைஞர்கள் கிறிஸ்தமஸ் தாத்தா வேடமணிந்து ஒரு கிறிஸ்துவப் பாடல் பாடிச் சென்றனர். அப்போது அங்குவந்த பஜ்ரங் தள் அமைப்பினர் கிறிஸ்தமஸ் தாத்தா வேடமணிந்த வர்களை தாக்கியதுமல்லாமல் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர்  அங்கு வந்து கிறிஸ் துமஸ் தாத்தா வேடமணிந்தவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர்.

இவ்விவகாரம் குறித்து அப்பகுதி தேவாலய தலைமை பாதிரியார் காவல் நிலையம் வந்து விசாரித்துள்ளார். அவர்களிடம் காவல்துறையினர் இந்தப் பாடல் குழுவினர் மதமாற்றப் பிரச்சாரம் செய்ததாக பஜ்ரங் தள் அமைப்பினர் புகார் அளித்ததாகக் கூறி உள்ளனர்.    ஆகையால் இவர்களை விசாரணைக்கு அடைத்து வைத்துள் ளோம் என்றும்  கூறினர். இந்த நிலையில் விசா ரிக்க வந்த பாதிரியார்களின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் தீயை அணைத்தனர்.   வாகன எரிப்பு நிகழ்த்தியவர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.  நடு இரவு வரை காவலில் வைக்கப்பட்ட கிறிஸ் துமஸ் தாத்தா வேடமணிந்த குழுவினர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner