எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெற்கிலும் மின்னணு வாக்குப் பதிவு கருவிக்கு எதிர்ப்பு

கருநாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்: முதல்வர் சித்தராமையா பேட்டி

பெங்களூரு, டிச. 16 கருநாடக மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டின் மத்தியில் நடைபெற உள்ள கரு நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என முதல் அமைச் சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா  ரெய்ச் சூரில் செய்தியாளர்களிடம்  கூறி யதாவது:  மத்தியில் பா.ஜ.க.வினர் ஆட்சியில் உள்ளனர். தேர்தல் ஆணையம் அவர்களது கட்டுப் பாட்டின் கீழ் செயல்பட்டு வரு கிறது. அவர்கள் தான் தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து வருகின்றனர்.

சமீப காலமாக நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குஜராத்  மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசு கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

எனவே, முன்புபோல், வாக் குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். கருநாடக சட்ட சபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலி யுறுத்த உள்ளோம்.

இமாசலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது வெறும் கருத்துக் கணிப்பு தான். டிசம்பர் 18-ஆம் தேதி என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner