எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிறுக்குப் பிடித்து விட்டதோ!

உ.பி.யில் தலைவர்களின் சிலைகள் காவிமயமாக்கப்படும் அவலம்

மீரட், டிச.16 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக கட்டடத் தில் காவி பூச்சு பூசத் தொடங்கி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களுக் கும் காவி வண்ணப்பூச்சு பூசப் பட்டு வருகின்ற நிலையில், அம்மாநிலத்தில் அமைந்துள்ள தலைவர்களில் இந்து தலை வர்கள் என அடையாளப்படுத் திட தலைவர்களின் சிலைகளுக் கும் காவி வண்ணப்பூச்சு பூச உள்ளதாக ஹிந்து யுவ வாகினி எனும் ஆர்.எஸ்.எஸ். இளை ஞர் அமைப்பு கூறியுள்ளது.

மீரட் நகரில் அமைந்துள்ள மங்கள் பாண்டே சிலை நகரின் மய்யமான இடத்தில் அமைந் துள்ளது. அச்சிலையை ஹிந்து யுவ வாகினி அமைப்பினர் களவாடி சென்றுள்ளனர்.

காவித் தலைப்பாகையுடன் இருந்த மங்கள்பாண்டே சிலையை யாருமறியாமல்  எடுத்துச்சென்ற அவ்வமைப்பின் மீரட் பொறுப் பாளர் சச்சின் மிட்டல் என்ப வர் கூறும்போது,

“சிலையை சேதப்படுத்த மாட்டோம் என்று உத்தரப் பிரதேச முதல்வரிடம் உறுதி கூறியுள்ளோம். இந்துக்கள் என் பதில் பெருமிதம் கொள்வோம் என்று விவேகானந்தர் கூறியுள் ளார். இந்துத்துவாவின் நிறம் காவியாகும். அதனால் புகழ் பெற்ற தலைவர்களின் சிலை களுக்கு காவி நிறத்தை அமைக்க உள்ளோம்’’ என்றார். ஏற்கெ னவே உத்தரப்பிரதேச மாநிலத் தில் இயங்கும் 50 பேருந்து களுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சி

சமாஜ்வாடி கட்சி மாவட் டத் தலைவர் ராஜ்பால்சிங் கூறியதாவது: “பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவே இதுபோன்ற பரப்புரை அமைந்து விடும். அற்பத்தனமான இது போன்ற பரப்புரைகள் நீண்ட காலத்துக்கு இருக்காது. இந் தியா என்பது வேற்றுமைகள் உள்ள நாடாக இருந்து வந் துள்ளது. அந்நிலையே எப்போ தும் நீடிக்கும்’’ என்றார்.

ஆர்.ஜே.டி கட்சி

ராஷ்டிரிய ஜனதா தள உத் தரப்பிரதேச மாநிலப் பொதுச் செயலாளர் அனுதீன் ஷா கூறியதாவது:

“தலைவர்களின் சிலை களுக்கு காவி நிறத்தைப் பூசு வதற்கு முன்பாக உண்மையில் அந்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். பாஜக கொள்கை களை ஏற்றுக்கொண்டவர்களா? என்பது குறித்து அறிந்து கொண்டு முடிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வேலைவாய்ப்பின்மை, போலி என்கவுன்ட்டர் கொலைகள், மருத்துவ மனைகளில் குழந் தைகள் உயிரிழப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்புவ தாகவே ஆளும் கட்சியினர்

இது போன்று செயல்பட்டு வருகிறார்கள் என்று எண்ணுகி றேன்’’ என்றார்.
இந்நாள்... இந்நாள்...


1900 - சீனி வேங்கடசாமி பிறப்பு
1928 - பனகல் அரசர் மறைவு
2006 - சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு  (முழு உரு வெண்கல சிலை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner