எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வெற்றி பெற இருப்பதோ தி.மு.க.தான்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

விருத்தாசலம், டிச.18 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்றும், அ.தி.மு.க.வில் உள்ள இரண்டு அணிகளில் அதிக வாக்குகள் வாங்குவது யார் என்பதில்தான் போட்டா போட்டி நிலவுவதாகவும் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விருத்தாசலத்தில் நேற்று (17.12.2017) ‘பெரியார் தேநீர் விடுதி’யை பார்வையிடச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தால்தான் உறுதி

செய்தியாளர்: ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல்பற்றி...?

தமிழர் தலைவர்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணத்தினுடைய விளையாட்டு மிக அதிகமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக வருகின்ற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில், எதற்காக இதற்கு முன்பு 89 கோடி ரூபாய்க்கான பட்டியலைப் பறிமுதல் செய்து, அந்தத் தேர்தலை நிறுத்தினார்களோ, அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா? தேர்தல் ஆணையம் இதனை எப்படி வேடிக்கைப் பார்க்கிறது?

எனவே, கடைசி நேரத்தில், முன்புபோல, இந்தத் தேர்தலையும் ஆக்குவதற்குத் திட்டமா? இதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தால்தான் உறுதி. உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது உறுதி என்பது.

அ.தி.மு.க.வில்  உள்ள இரண்டு அணிகளில் யார் அதிகம் ஓட்டு வாங்குவது என்பதுதான் அவர்களுக்கிடையே இருக்கின்ற உயிர்ப் பிரச்சினை.

எனவே, அதற்காக பணத்தை வாரி இறைக்கிறார்கள். இதனை வேடிக்கை பார்க்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் கூத்தாக இது நடந்துகொண்டிருக்கிறது; தேர்தலாக நடைபெறவில்லை.

பா.ஜ.க.வினரின் குற்றச்சாட்டு

செய்தியாளர்: பணப்பட்டுவாடாவை ஆளுங்கட்சிதான் செய்கிறது என்று பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டுகிறார்களே?

தமிழர் தலைவர்: அதைப் பார்க்கவேண்டிய கடமை உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner