எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, டிச.18 டில்லியில் 2012-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.  இருப்பினும் நாட்டின்பெருநகரங்களில்பெண் களுக்குஎதிராகநடக்கும்குற் றங்கள் அதிகரிப்பது நிற்க வில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் மீண்டும் தலைநகர் டில்லி முதலிடத்தில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

நிர்பயா(புனைப்பெயர்) என்ற பெண் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்வலைகளைஏற் படுத்தியது. தலைநகர் டில்லி யிலேயே பெண்களுக்கு பாது காப்பில்லை என்ற அவல நிலையை இச்சம்பவம் வெளிப் படுத்தியது.

ஊடகங்கள்  பெண்கள், குழந் தைகள், சிறுமிகள், மூதாட்டிகள் என வயது வரம்பின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக் கின்றன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதோடு பெண்களை கொடூரமாகத் தாக் கும் சம்பவங்களும் அன்றாட நிகழ்வாக மாறி வருகின்றன. பல நேரங்களில் அவர்களை காப்பாற்றக்கூட பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை.

இந்நிலையில் தேசிய குற்ற ஆவணச் செயலகம் (நேச னல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) என்ற மத்திய அரசின் குற்றத் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யும் அமைப்பு வெளியிட் டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

நாட்டின் பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் மூன்றில் ஒரு குற்றம் தலைநகர் டில்லியில் நடப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: தேசிய குற்ற ஆவணங்கள் செயலகம் (நேசனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) -2017

மேலும்டில்லியில் பெண் களுக்கு எதிராக பதிவு செய்யப் படும் குற்றங்கள் 2012 ஆம் ஆண்டில் 13260 ஆக இருந்து 2017 ஆம் ஆண்டில் 13,803 ஆகஉயர்ந்துள்ளது.இது மிக வும்கவலையளிப்பதாகஉள் ளது. இந்தியா போன்ற நாட் டில் ஆணாதிக்கச் சமூகம் செய்யும் இந்த கொடுமையை வெளியே சொன்னால் பாதிக் கப்பட்டவருக்காக குரல் கொடுக் காமல், அவரையே பழிசொல்லும் அவல நிலை உள்ளது இன்ற ளவும் தொடர்கிறது

தற்போது பாலியல் வன் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு கருவுற்ற சிறுமிகள் தங்கள் கருவை கலைக்க நீதிமன்றத்தை நாடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் நீதிமன்றங்களின் உத்தரவுகளும் பெண்களுக்கு எதிரான நட வடிக்கைகள்அதிகரிக்கஒரு காரணமாகிவிடுகிறது, எடுத்துக் காட்டாக சமீபத்தில் ராஜஸ்தான் நீதிமன்றம் 18 வயதிற்குட்பட்ட திருமணமான பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம் என்று கூறியுள்ளது, அதாவது 18 வயது திருமண வயதாக சட்டத்தில் உள்ளபோது நீதி மன்றத்தின் இந்த உத்தரவு ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இதற்கும் ஒருபடி மேலே போய் ஆணுறை விளம் பரங்கள் மற்றும் உள்ளாடை விளம்பரங்களை தடை செய் துள்ளது. இதற்குக் காரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்குத் தூண்டுகோலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச் சிகளில் மோசமான காட்சிகள் தற்போது சாதாரணமாக வரத் தொடங்கியுள்ளன. பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு களாக மத்திய அரசையும், நீதி மன்றத்தையும் தொடர்ந்து கேட்டுவந்த போதிலும் மத்திய அரசும், நீதிமன்றங்களும் இதற்கு செவிசாய்க்காமல் இருந்து விடு கின்றன.

முக்கியமாக சில அரசியல் தலைவர்கள்பெண்களின்ஆடை கள், அவர்கள் யாருடன் செல்ல வேண்டும், எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என்றெல்லாம் பேசி வருகின்றனர். மிகவும் முக் கிய பதவியில் உள்ளவர்கள் இவ்வாறுபேசும்போது,குற்ற வாளிகளுக்கு அச்ச உணர்வு அகன்று, தொடர்ந்து பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளைச் செய்கின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேச அரசு, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரணதண்டனை என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாககூறியுள்ளது. அம் மாநில அரசு கூறிய இரண்டா வது நாளே தலைநகர் போபா லில் இரண்டு சிறுமிகள் பாலி யல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

சிறுமிகளும்,குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது நிறுத்தப்பட வேண்டு மானால்குற்றவாளிகளுக்குகடு மையான தண்டனைகள் கொடுப் பதைவிட, நம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கொடுப்பது அவசியமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner