எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் ‘டில்லியே சரணம்' தமிழக முதலமைச்சர் ஈ.பி.எஸ்.!

பட்டியலைப் பெரிதாகப் போட தி.மு.க.வினர் முன்வரவேண்டாம்!

இந்தியாவில் வேறு எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் இல்லாத வகையில் 45,000 போலி வாக்காளர்களை கண்டுப் பிடித்து பட்டியலிலிருந்து அவர்களை ‘தூக்கிட’ச் செய்தாரே அது தேர்தல் வரலாற்றில் எங்காவது நடைபெற்றுள்ளதா?

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் கொடுத்த பட்டியலை - ஓ.பி.எஸ். மற்றும் தற்போதைய அமைச்சர்கள் ‘‘சாதனையை’’ வருமான வரி வெளியிடக் காரணமாக அமைந்தாரே!

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தாவது இரட்டை இலையை இவர்களுக்குத் தந்தாக வேண்டும் என்ற மோடி அரசுக்கும் மண்டைக் குடைச்சலை தந்து - இரட்டை இலை தானம் கிடைத்த பிறகும், ஆளும் கட்சிக்கும், மற்றவர்களுக்கும் சிம்மசொப்பனமாக  - ஆழமான ஒரு ஆரோக்கியப் போட்டியை நடத்திக் காட்டி வருகிறாரே, இதற்குமேல் ஜனநாயகம் காப்பாற்றப்பட பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் வேறு என்ன செய்யவேண்டும் அத்தொகுதிக்கு?

ஓட்டுக்கு ரூ.6,000 தந்தாவது ‘‘எப்படியும்'' ஜெயித்தாகவேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில், திக்கித் திணறும் நிலையை அ.தி.மு.க.விற்கு ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். என்ற டில்லியின் எஸ்.களுக்கு ‘நெருக்கடியை’ உண்டாக்கியிருக்கிறாரே, அது போதாதா?

‘நீட்’ தேர்வில் விலக்குத் தேவை என்று ஓராண்டுக்குமுன் நிறைவேற்றி, டில்லிக்கு அனுப்பிய இரண்டு மசோதாக்கள் என்னவாயிற்று என்று கேட்டு மாநில உரிமையை நிலை நிறுத்தத் தவறிவிட்ட இவர்கள் வாய்ச் சவடால், வக்கணைகளைப் பேசலாமா?

வெட்கம்! மகாவெட்கம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner