எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூன்று ஆண்டு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் ஏமாற்றம்!

அதன் விளைவே குஜராத்தில் பி.ஜே.பி.,க்கு ஏற்பட்ட பெரும் வாக்குச் சரிவு

2019 தேர்தலில் காங்கிரசு தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து மதவாதப் பிற்போக்கு ஆட்சியை வீழ்த்துவது அவசியம்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வாக்குச் சதவிகிதம் சரிந்துள்ளது - மக்களின் ஏமாற்றத்தின் எதிரொலியே இது!  2019 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசு தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து மதவாத பிற்போக்கு பி.ஜே.பி. ஆட்சியை அகற்றிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் கடந்த பல ஆண்டுகளாக பா.ஜ.க.வின் செல்வாக்கை தக்க வைத்து தொடர்ந்து 5 முறை ஆட்சியில் இருந்தார் மோடி; பிரதமரானார் 2014 இல்.

பிரதமர் மோடியின் ‘விகாஸ்’ (வளர்ச்சி) என்பதை நம்பி நாடும், மக்களும் ஏமாந்தனர்!

நிலவிய வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை, விவசாயிகளின் வேதனை - தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் இலங்கை அரசால் பறிக்கப்பட்ட தமிழக மீனவர்தம் வாழ்வுரிமை, ஈழத் தமிழர்களின் இன்னல் - இவைகளிலிருந்து பெரிய தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, முந்தைய காங்கிரசு தலைமையிலான ஆட்சி மீது ஏற்பட்ட மலைபோன்ற வெறுப்பு - இவைகளால் மோடியோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ எதிர்பாராத வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குத் தந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளில் ஏமாற்றம்தான்!

ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் மிஞ்சியது ஏமாற் றம்தான் என்பதையும், பொதுவானவர்கள்கூட ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவ வெறியர்களின் தாங்கொணாத அட்டகாசங்கள். ‘தாஜ்மகாலை இடிப்போம்‘ என்பது, மாட்டுக்கறி தடுப்பு, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையோர் மற்றும் (‘தலித்') - தாழ்த்தப்பட் டோருக்கு எதிரான வன்கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமா? வன்முறை, கொலைகள், விவசாயிகளின் வற்றாத கண்ணீர், பொருளாதாரத் துறையில் சீர்திருத்தம் என்ற திட்டங்கள், சட்டங்கள்மூலம் - பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இப்போது உத்தேசித்துள்ள வங்கி களில் போடப்பட்ட வைப்புத் தொகைக்கு நிச்சயமற்ற தன்மை, வாடிக்கையாளர்களின் அடிப்படை உரிமைப் பறிப்பு, விலைவாசி ஏற்றம், தனியார் முதலாளிகளான அடானி, அம்பானி போன்றவர்களுக்குத் தாராளமாக திறந்துவிடப்பட்ட பொருளாதாரக் கதவுகள், கட்சிக்குள் ளேயே மூத்த - முதிர்ந்த தலைவர்களின் கடும் விமர் சனங்களும், குமுறல்களும் - இவை அத்தனையும் பிரதமர் மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிவருகின்றன!

மூச்சுத் திணறல்!

குஜராத், இமாச்சலப்பிரதேசம் - தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துவிட்டது என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், அதைப் பிடிப்பதற்கு அக்கட்சிக்கு ஏற்பட்ட கடும் ‘‘மூச்சுத் திணறல்’’, பிரதமர் மோடியினால் இனி தங்களது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பாடம் போல உணர்த்துகிறது! சுவரெழுத்தாகப் பளிச்சிடுகிறது!

இது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி (றிஹ்க்ஷீக்ஷீலீவீநீ க்ஷிவீநீtஷீக்ஷீஹ்) என்பதை முடிவுகள் தெளிவாக உணர்த்து கின்றன!

2019 - மக்களவைத் தேர்தலில்

காங்கிரசுக்கு வாய்ப்புண்டு

காங்கிரசு அதனுடைய திட்டங்களையும், அதன் தலைமையின் கடும் உழைப்பையும் தந்தால், 2019 இல், பா.ஜ.க.வின் சிம்மாசனத்தைப் பறித்து, மீண்டும் இந்து நாடாக ஆக்க முயலும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சிடமி ருந்து நாட்டைக் காப்பாற்றிட முடியும் என்பதையே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்து கின்றன.

எடுத்துக்காட்டாக, குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையே ஆராய்ந்தால், நாம் நேற்றைய அறிக்கை யில் சுட்டியதுபோல, பா.ஜ.க. - மோடி - அமித்ஷா பெற்ற வெற்றி தோல்விக்குச் சமமான வெற்றியே தவிர, பெருமிதத்திற்குரிய வெற்றி அல்ல என்பது அவர்களது மனச்சாட்சிக்கே புரியும்!

பி.ஜே.பி.,க்கு 10 சதவிகித வாக்குச் சரிவு!

2012 இல் மூன்று இலக்கம் பெற்று குஜராத்தில் ஆட்சியை மீண்டும் அமைத்தார் மோடி.

இப்போது (2017) 99 இடங்கள்தான், 182 மொத்த இடங்களில்!

பெற்ற வாக்குகள் 49.1 சதவிகிதம்தான்!

இதே வாக்கு விகிதம்

நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் 59.1 சதவிகிதம் (10 சதவிகித செல்வாக்கு குறைவு - தளர்ச்சி).

99 இடங்கள் பா.ஜ.க.வுக்கு; எதிர்க்கட்சி காங்கிரசு 61 இடங்களை 2012 இல் பெற்றது; இப்போது 77 இடங்களைப் பெற்று தனது வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது.

குறைந்த வாக்குகளில் காங்கிரசு தோல்வி

குஜராத் சட்டசபைத் தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரசு வேட்பாளர்கள் 3000-த்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.விடம் தோல்வி அடைந்துள்ளனர் என்பதை பா.ஜ.க.வின் வெற்றியைக் கொண்டாடுவோர் கவனிக்கத் தவறக்கூடாது.

காங்கிரசு 3000-த்திற்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்ற பல தொகுதிகளில்,

‘நோட்டாவுக்கு’ (யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்) அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

‘‘நோட்டாவுக்கு’’ குஜராத்தில் இத்தேர்தலில் கிடைத்த வாக்குகள் மொத்த வாக்குகளில் 5.5 லட்சம் - அதாவது 1.8 சதவிகிதம்.

கோத்ரா தொகுதியில், காங்கிரசு வேட்பாளர் வெறும் 258 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்! இங்கே ‘நோட்டா’ பெற்ற வாக்குகள் 3050.

நோட்டாவுக்கு வாக்குகள்

‘நோட்டா’ வாக்குகள்மூலம் ஆளும் பா.ஜ.க.வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்பதுதான் முக்கியமான செய்தி. அது சரிந்துவரும் மோடி - அமித்ஷா - பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிர் செல்வாக்குக்கான சான்று அல்லவா!

1. தோல்கா தொகுதி            -              வாக்கு வித்தியாசம் 327

2. பொடாட் தொகுதி             -              வாக்கு வித்தியாசம் 906

3. விஜாப்பூர் தொகுதி          -              வாக்கு வித்தியாசம் 1,164

4. போர் பந்தரில்       -              வாக்கு வித்தியாசம் 1,855

5. கர்தார்          -              வாக்கு வித்தியாசம் 1,876

6. உம்ரேத்தில்           -              வாக்கு வித்தியாசம் 1,883

 

இப்படி - குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது!

அதுமட்டுமா?

பா.ஜ.க.வுக்கு ‘150’ என்ற அவர்கள் நிர்ணயித்த இலக்கை எட்டவில்லையே!

குஜராத் சட்டசபை சபாநாயகர், முக்கிய அமைச் சர்கள் பலர் காங்கிரசிடம் தோற்றுள்ளனர். பிரதமர் மோடி சொந்தப் பகுதியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு கேள்விக்குறியாகி உள்ளது!

இங்கே மட்டுமல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றிக்குப் பின் நடைபெற்ற அனைத்து மாநிலத் தேர்தல்கள் - இடைத்தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு இறங்கு முகத்தில்தான் உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பாதுகாவலராக உள்ள பார்ப்பன ‘தினமலர்’ போன்ற செய்தித்தாள்களில், ‘எச்சரிக்கை மணி’ என்று கூறுவதோடு, மற்றொரு கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளது. (இன்று 20.12.2017 இதழில்).

குஜராத் தேர்தல் முடிவு - எச்சரிக்கை

‘‘குஜராத் தேர்தல் முடிவு எதேச்சதிகார ஆட்சியா ளர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள் ளது’’ என்று சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ ஏடு எழுதி யுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது!

இடதுசாரிகள் உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இடக்குகள் செய்யாமல், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதியைக் காப்பாற்ற ஓரணியில் காங்கிரசு தலைமையில் சேர்ந்து மதவெறி பிற்போக்கு சக்திகளை வீழ்த்திட வியூகம் வகுக்கவேண்டிய தருணம் இது!

 

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

 

சென்னை
20.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner