எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், டிச.20 பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் அரசு மருத் துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணை செவிலியர்கள் விரட்டி அடித்தனர். இதனால் வயல்வெளியில் அவருக்கு பொது மக்கள் உதவியுடன் பிரசவம் பார்க் கப்பட்டு, குழந்தை பிறந்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் டின்டோரி மாவட்டத்தில் கர்ப் பிணி ஒருவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்கள் அவருடைய குழந்தை வயிற்றினுள் இறந்தநிலையில்உள்ளதுஎனக் கூறி சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.

அவர் பிரசவ வலியால் துடித்த போது அங்குள்ள செவிலியர்கள் அடித்து விரட்டினர். வெளியே வந்த அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அவரை அருகிலிருந்த வயல்வெளியில் படுக்க வைத்த னர். வெட்ட வெளியில் சேலையை வைத்து நான்கு புறமும் மறைத்தனர். பின்னர் பெண்ணிற்கு அவர்களே பிரசவம் பார்த்தனர். இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட அந்த குழந்தை உயிருடன் பிறந்தது. அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகதெரிவித்தனர்.அதன் பின் அந்த பெண் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் பேசுகையில்,

‘இது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட்டுள்ளேன். சம்பந்தப் பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என கூறினார்.

இதே போன்று ஒடிசாவில் பிரசவம் பார்க்க மறுக்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனை அருகே உள்ள கால்வாயில் குழந்தை பெற்ற சம்பவம் மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner