எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திமு கழகத்தை அழிக்க திட்டமிட்டு திணிக்கப்பட்ட

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தளபதி மு.க.ஸ்டாலின்  பேட்டி

சென்னை, டிச.21 திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21..12..2017) சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

தளபதி மு.க.ஸ்டாலின்: வரலாற்று சிறப்புமிக்க தொரு தீர்ப்பு இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு போடப்பட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப் படுத்தி, அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் இந்த 2ஜி வழக்கு. அந்தவகையில், இதை பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்குகளை எல்லாம் காட்டி இந்த வழக்கை திணித்தார்கள். அப்படிப்பட்ட இந்த வழக்கிலிருந்து, அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு டில்லியில் உள்ள தனி நீதிமன்றம்மூலம் கிடைத்திருப்பது உள்ள படியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. எனவே, திமுகவை பொறுத்தவரையில் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை தனி நீதிமன்றம் தெளிவாக தங்களது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கும் இந்தநேரத்தில், ஊடகத் துறையை சேர்ந்த உங்களை நான் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த வழக்கு போடப்பட்ட போது, இதை எந்தளவுக்கு மக்களிடையே பெரிதுபடுத்தி, கழகத்தின் மீது எவ்வளவு பெரிய களங்கத்தை சுமத்த வேண்டும் என்று எவ்வளவு ஆர்வத்தோடு இதில் கவனம் செலுத்தினீர்களோ, இப்போது திமுக எந்தவித குற்றமும் செய்யவில்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பையும் மக்களிடத்தில் நீங்கள் ஆர்வத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும், உங்களுக்கு உள்ள அந்தக் கடமையை நீங்கள் ஆற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

 


2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது: மன்மோகன் சிங்

புதுடில்லி, டிச.21 2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (21.12.2017) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் எனக் கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கினால் மிகப்பெரிய அவதூறுகளைச் சந்தித்த,வழக்கில்தொடர் புடையவர் எனக்கூறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்செய் தியாளர்கள் சந்திப்பில், ‘‘இந்தவழக்கின்மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண் டியது. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் மீதான ஆதாரமற்ற குற் றச்சாட்டுகளை பொய் என நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner