எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால்,டிச.22மத்தியப்பிர தேசத்தில் பரபரப்பை ஏற்படுத் திய வியாபம் (மத்தியப் பிரதேச தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு வாரியம்)முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 491 பேருக்கு சிபிஅய் அதிகாரிகள், டிவிடி-யில் பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை அளித்தனர்.

வழக்கமாக குற்றப்பத்திரி கையானது, காகிதத்தில் அச்சிடப் பட்டுதான் வழங்கப்படும். ஆனால், இந்த வழக்கில் குற் றப்பத்திரிகை மற்றும் அதன் இணைப்புகள் மொத்தம் 39,500 பக்கங்கள் இருந்தன. மேலும் 491 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்க வேண்டியிருந்தது. அவற்றை எடுத்து வருவதற்கே ஒரு லாரி தேவைப்படும் என்ற நிலை இருந்தது.

எனவே, குற்றப்பத்திரிகை டிவிடி வடிவில் வழங்கப்பட்டது. போபாலிலுள்ள சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து இந்தகுற்றப்பத்திரிகைடிவிடி அளிக்கப்பட்டது. இதுவியாபம் மூலம் நடைபெற்ற மருத்து வக்கல்லூரிநுழைவுத்தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்குள் ளானவர்கள் மற்றும் அவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் இந்தக் குற்றப்பத்திரிகை டிவிடியை பெற்றுக்கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner