எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அசுரர்கள், ராட்சதர்கள் என்பவர்கள் நம் முன்னோர்களே!

உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர் இன்றைய இளைஞர்கள்

ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது

சென்னை, டிச.22 இத்தாலியைச் சேர்ந்த பொதுவு டைமைச் சித்தாந்தவாதியும், மார்க்சியவாதியுமான அண்டோனியோ கிராம்ஷி வகுப்பு வர்க்கப் பேதம்பற்றி கூறும்போது, ‘‘எளிமையானவர்களை பலம்கொண்டவர்கள் அடக்கிஆளும் போது ஏன் அவர்களை அடக்குகிறோம் என்பதற்காக பல்வேறு கதைகளை வலுவாகத் திணித்து விடுவார்கள். அதை உண்மையென்று அனைவரையும் நம்பவும் வைப்பார்கள். இது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இந்திய நாட்டில் இன்றளவும் இந்த நடைமுறைகள் தொடர்கின்றன’’ எனக் கூறியுள்ளார்.

மூத்த சமூகவியல் ஆய்வாளரும், கொலம்பிய பல்கலைக்கழக தத்துவியல் பேராசிரியருமான காயத்திரி  சக்ரோபர்த்தில் சிப்வக், இந்தியாவில் வலிமை வாய்ந்த சமூகத்தினரால் ஒடுக்கப்படும் மக்கள் குறித்த ஆய்வு நடத்தி அண்டோனியோவின் கருத்தை உண்மை என நிரூபித்தார்.

கருத்தரங்கில்...

சென்னை ரோஜாமுத்தையா நூலக ஆய்வக அரங்கத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய  பாரதிதாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒய்.சிறீனிவாச ராவ் கூறும் போது,

‘‘இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய கலாச்சார பின்புலன்களை எளிமையாக அடை யாளம் காணும் திறமை வந்துவிட்டது. இதிலிருந்து தங்களது கலாச்சாரத்தில் வலுவாகத் திணிக்கப்பட்ட எதிர்மறையான கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களுடைய வாழ்க்கைப் படிநிலையை உயர்த்தும் திறன் பெற்றுவிட்டனர்.

கலாச்சார வரலாற்றைப் பிரதிபலிக்கும் நூல் களை முதன்மைப்படுத்தாமல் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் முடக்கும் விதமாக அவர்களின் மூதாதையர்களை அசுரர், ராட்சதர் எனப் பொய்யாக எழுதி வைத்துள்ளனர். முக்கியமாக இந்துப் புராணங்களில் வரும் அசுரர் பாத்திரங்கள் அனைத்தும் தங்களின் மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு ஆரியர்களை கடுமையாக அடக்கியவர்களை இந்து புராணங்களில் அசுரர், ராட்சதர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து இன்றைய நகர்புறவாழ் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால், சமீபத்திய நவீன யுகத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் மூதாதையர்களை தீயவர்களாக சித்திரித் துள்ளதைப் புரிந்துகொண்டுள்ளனர்.

தந்தை பெரியார் போன்றவர்கள்....

முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு சமூகப் புரட்சியாளர்களான பீம்ராவ் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிராவ் பூலே போன்றோர்கள் தொடர்ந்து முன்வைத்த திராவிடர்களை மோசமாக சித்திரித்த ஆரியர்கள் குறித்த ஆய்வுகளையும், உண்மைகளையும் இளைய தலைமுறையினர் சமீபகாலமாக உள்வாங்க ஆரம்பித்துவிட்டனர். இந்து புராண இதிகாசங்கள் அனைத்தும் தங்களின் மூதாதையர்கள் தீயவர்களாக சித்தரிக்கப்பட்ட வைகளே என்பதையும் அறிந்துகொண்டனர்.

ஈரானிய தத்துவ ஞானியான அல்புராணியும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். 11 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பல இந்து இதிகாச நூல்கள் முக்கியமாக வட இந்தியாவில் பிரச்சாரம் செய்யப்படும் கதாகாலட்சேபங்களில் தென் இந்தி யாவைச் சேர்ந்தவர்களை  இந்து அல்லாதவர் களாகவும், அவர்களை அசுரர்களாகவும், அவர் களிட மிருந்து இந்துக்களைக் காப்பாற்ற கடவுள்கள் அவதாரமெடுத்து வந்து அசுரர்களை அழித்ததாகவும் கதைகளை எழுதி வைத்துள்ளனர். அதை மக்களிடையே வலுக்கட்டயமாக நம்ப வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.  முக்கியமாக கடவுள் மறுப்பாளர்களாக, பகுத்தறிவுவாதிகளாக இருந்த தலைவர்களை தீயவர்களாக சித்தரித்ததைக் குறிப்பிட்டு அம்பேத்கர் மற்றும் பூலே போன்றோர் வெளிச்சமிட்டுக் காட்டினர்.

இளம் தலைமுறையினர்

உணரும் நிலை

இன்றுள்ள இளம் தலைமுறையினரிடம் தங்கள் மூதாதையர்களைப் பற்றியும், தங்களின் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை பரப்பவேண்டியது அவசியமான தாகும். ஒரு புதிய சிந்தனையை உருவாக்கும் நிலைக்கு தற்போதைய சமூக ஆர்வலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றளவில் இப்பணி மிகவும் எளிமையானது, சமீப காலமாக வட இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, வங்காளம், கருநாடகா போன்ற மாநிலங்களில் இந்துக் கடவுள்கள் தங்களின் வழிபாட்டிற்குரியவர்கள் அல்ல என்றும், தங்களின் மூதாதையர்களை இவர்கள் அசுரர்களாகவும், தீயவர்களாகவும் சித்தரித்துள்ளனர் என்பதை இந்தக் காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் கல்வி, சமூக அக் கறை, கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம், அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்பும் துணிவு போன்றவைதான். இளம் தலைமுறைகள் மதங் களையும், அதன் நம்பிக்கைகளையும் வளர்ச்சிக்கான தடையாகப் பார்க்கின்றனார். முக்கியமாக கல்வி கற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இந்த விழிப்புணர்வு கிளம்பியுள்ளது நல்ல மாற்றமாகும்.

தீபாவளியை மறுக்கும் தீரர்

தீபாவளி, தசரா போன்ற விழாக்களில் இன் றைய தலைமுறையினர் அதிகம் கேள்விகளை எழுப்பத் துவங்கியுள்ளனர். முக்கியமாக தங்களின் மூதாதையர்களை தீயவர்களாகச் சித்தரித்து அவர்களை வஞ்சகமாக கொலை செய்துவிட்டு அதை கொண்டாட்டமாக தங்கள்மீது திணிப்பதை அறிந்துகொண்டுள்ளனர். இளம்தலை முறையினர் தற்போது தங்கள் மூதாதையர்களான அசுரர்கள் என்று சொல்லப்பட்டவர்களை கொண்டாடத் துவங்கிவிட்டனர். முன்பு போல் கடவுள்களை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இளந்தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எதிர்காலத்தில் இதி காச நம்பிக்கைகளை முற்றிலும் தகர்த்தெறிந்து விடும் என்று ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட் டுள்ளது’’ எனத் தமது உரையில் குறிப்பிட்டார்.

(தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் நீண்ட காலமாக சொல்லி வந்ததை இன்றைய தினம் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner