எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.22  எதிரிகளுடைய சூழ்ச்சி எப்பொழுதும் தோற் கும்; திராவிடம் எப்பொழுதும் வெல்லும்! ஆரியம் ஒருபோதும் வெல்லாது - தோற்கடிக்கப்படும்  என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை கோபாலபுரத்தில் நேற்று (21.12.2017) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்துவிட்டு வந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

கலைஞரிடம் உரையாடியது மகிழ்ச்சி

மிகப்பெரிய ஒரு சோதனையிலிருந்து திட்டமிட்ட ஒரு சூழ்ச்சியிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறது திராவிட முன் னேற்றக்கழகம்குறிப்பாகதிராவிடர்இயக்கம்.இதனை அழிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன. பொய்மைத் திரை கிழிந்திருக்கிறது.

கலைஞர் அவர்களைச் சந்தித்தபொழுது, மிகுந்த மகிழ்ச்சி யோடு நான் அவரிடம் பேசும்போது, ‘‘வெற்றி விழா கூட்டத்திற்குப் போகலாம், வாருங்கள் அய்யா!’’ என்று நான் சொன்னபோது,

‘‘எப்போ’’ என்று அவர் கேட்டார்.

அதனைக்கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது எங்களுக்கு.

ஆரியம்  தோற்கடிக்கப்படும்

எனவேதான், நெருப்பாற்றில் நீந்தியது; நெருக்கடி காலத்தையும் தாண்டிய மற்றொரு நெருக்கடியை சந்தித்தாலும், எதிரிகளுடைய சூழ்ச்சி எப்பொழுதும் தோற்கும்; திராவிடம் எப்பொழுதும் வெல்லும்! ஆரியம் ஒருபோதும் வெல்லாது - தோற்கடிக்கப்படும் என்பதற்கு இந்தத் தீர்ப்பே ஒரு சான்றாகும்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner