எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பஸ்தி ( உ.பி), டிச.22 மூன்று சாமியார்களால் சிறை வைக்கப்பட்டு பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக 4 பெண் பக்தர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பஸ்தியில் உள்ள  பாபா சச்சிதானந்த் என்ற சாமியார் ஆசிர மம் நடத்தி வருகிறார்.இவருக்கு இந்தியா முழுவதும் பல ஆசிரமங்கள் உள்ளன.

இந்த ஆசிரமத்தை சேர்ந்த  நான்கு பெண் பக்தர்கள் சாமியார் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் தங்களைத் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்து வந்ததாக  பஸ்தி காவல் நிலையத்தில்  புகார் செய்து உள்ளனர். இந்த நிலையில் குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர்.

இதுகுறித்து பஸ்தி காவல்துறை கண் காணிப்பாளர்சங்கல்ப் சர்மா கூறியதாவது:-

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கபட்டபெண்களில் ஒருவர் தான் சதீஷ்கரில் இருந்து வந்து தனது 12 வயதில் ஆசிரமத்தில் சேர்ந் ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது,நான் அப்பாவியாக இருந் தேன். என்னை அவர்கள்  என்ன செய்து கொண்டிருந்தார்கள்  என்றுகூட எனக்குத் தெரியவில்லை.

நான் அவர்கள் செயலுக்கு மறுப்பு தெரிவித்த போது 3 பாபாக்கள்மூலம் நான் பாலியல் வன்முறை செய்யப்பட்டேன். நான் சிறை வைக்கப்பட்டேன். தொடர்ந்து துன்புறுத்தப்பட்டேன். பாலியல் வன் முறை செய்யப்பட்டேன் என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner