எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோயம்புத்தூர், டிச. 23 நதிகளை மீட்போம் என ஈசா மய்யத்தின் நிறுவனரான சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் திட்டம்  மக்களிடம் இருந்து நிலத்தைப் பறிப்பதற்கான  இயக்கம் என தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

இந்தியாவின் ‘தண்ணீர் மனி தர்’ என்று புகழ்பெற்ற ராஜேந் திரசிங்  கோவை பத்திரிக்கை யாளர் மன்றத்தில் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘நதிகளை மீட்போம்‘ என்ற பெயரில் இயக்கம் நடத்திய  ஈசா யோகா  மய்ய நிறுவனர்  ஜக்கி வாசுதேவ் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தி இருந் ததாக அப்போது குற்றம்சாட்டி னார்.

மேலும் அவர் கூறியதாவது-:

ஒரு அரசாங்கம் ஆற்றையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் போதும்,   அதைக் கெடுக்கும் போதும்  அதைத் தடுப்பதுதான்  சாமியாரின் வேலை  என்று  மட் டுமே ஜக்கிவாசுதேவினை சந் தித்தபோது  நான் தெரிவித்தேன்.  இதுவரை நாடு முழுவதும்  9 ஆறுகளை நான் மீட்டெடுத்து இருக்கின்றேன். ஆனால், இது வரை ‘மிஸ்டு கால்’ மூலம் நதி களை மீட்டு எடுப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை.

இதுபோன்ற சாமியார்களு டன் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஒருவருக்கு  ஒருவர் உதவிக் கொள்ள மனித உறவுகளைச் சிதைக்கின்றனர். நதிகளை மீட் கும் ஜக்கியின் திட்டம் மக்க ளிடம் இருந்து நிலத்தைப் பறிப் பதற்கான திட்டம். இத்திட்டத் தைக் காட்டி பல மாநிலங்களில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளில்  மட் டும் ராம் ரஹீம்பாபா, ஆசாரம் பாபா உள்ளிட்ட 4 பிரபல சாமி யார்கள் சிறைக்குப்  போயிருக் கின்றனர்.  பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால் அய்ந்தாவது சாமியா ராக ஜக்கி வாசுதேவ்  சிறையில் இருப்பார். இவரை அம்பலப் படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும்  பெரும்கேடு ஏற்படும்.

ஜக்கி வாசுதேவ்வின் மோசடி களை மக்களிடம் அம்பலப் படுத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனது பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மோசடி ஆவ ணங்கள், ஈசா மய்யத்தில்  சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில்  இறந்து போயிருப்பது, சேலத்தில் 9 லட்சம் மரங்கள்  நட்டு இருப்பதாக பொய்யான தக வலை பரப்பியது என  ஈசா மய்யம் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளை அம்பலப் படுத்த உள்ளதாகவும் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில்  சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ், பழங்குடி மக்கள் சங்க தலைவர்  முத்தம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட

னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner