எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி,டிச.23 பாரதீய ஜனதா கட்சியின் அடித்தளமும், கட்டுமான மும் பொய்களால் ஆனது என காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசு கட்சியின் தலை வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டில்லியில் நேற்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பாரதீய ஜனதா கட்சியின் அடித்தளமும், கட்டுமானமும் பொய்களால் ஆனது என தெரிவித்தார். குஜ ராத்தின் வளர்ச்சி பற்றிய மோடியின் பிரச்சாரமும் ஒரு பொய்யே என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மகனின் நிறுவனங்களில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் பற்றியும் பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner